தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கு விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரி மற்றும் படிப்புகளை தேர்வு செய்யும் 3 வது சுற்று நிரப்புதலை இன்று தொடங்கியுள்ளது. தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகத்தின் (DoTE), வலைதளப் பக்கத்தின் மூலம் ஆன்லைன் முறையில் TNEA 2021 இன் 3 வது சுற்று கல்லூரி மற்றும் படிப்புகளை விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யலாம்.
விண்ணப்பதாரர்கள் தங்கள் செல்லுபடியாகும் உள்நுழைவு சான்றுகளான பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி தங்களுக்கு விருப்பமான கல்லூரிகள் மற்றும் படிப்புகளை நிரப்ப வேண்டும். விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட கால அட்டவணைக்குள் தங்களுக்கு விருப்பமான கல்லூரி மற்றும் படிப்புகளை தேர்தெடுத்து சமர்ப்பிக்க வேண்டும்.
கல்லூரி மற்றும் படிப்புகளை தேர்தெடுத்து சமர்பித்தப் பிறகு எந்த மாற்றமும் அனுமதிக்கப்படாது. கல்லூரி மற்றும் படிப்புகளை விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுத்தப்பின், தேர்வு செய்யப்பட்ட கல்லூரி மற்றும் படிப்புகளின் பட்டியலைக் கொண்ட ஒரு பிடிஎஃப் கோப்பு அவர்களின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும். TNEA 2021 இன் 3 ஆம் சுற்றுக்கான இட ஒதுக்கீடு அக்டோபர் 12 அன்று ஆன்லைனில் வெளியிடப்படும்.
TNEA 2021க்கான கல்லூரி மற்றும் படிப்புகளை தேர்வு செய்து நிரப்புவது எப்படி?
விருப்பமான கல்லூரிகள் மற்றும் படிப்புகளை நிரப்ப, விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விரிவான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
முதலில் அதிகாரப்பூர்வ வலைத்தளப் பக்கமான www.tneaonline.org க்குச் செல்ல வேண்டும்.
முகப்புப் பக்கத்தின் மேல் வலது மூலையில் உள்ள உள்நுழைவு பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும்.
பின்னர் எந்த தவறும் இல்லாமல் மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு உள்நுழைய வேண்டும்.
இப்போது, விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரிகள் மற்றும் படிப்புகளை பூர்த்தி செய்யலாம்.
இறுதியாக, சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும்.
முக்கிய குறிப்பு: விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரி மற்றும் படிப்புகளை குறிப்பிட்ட நேரத்திற்குள் சமர்பிக்கத் தவறினால், தேர்வுகள் தானாகவே சமர்பிக்கப்பட்டு விடும்.
TNEA 2021 கவுன்சிலிங்
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2021 என்பது ஆன்லைன் பதிவு, கட்டணம் செலுத்துதல், கல்லூரி மற்றும் படிப்புகளை தேர்வு செய்தல், சீட் ஒதுக்கீடு, தற்காலிக ஒதுக்கீட்டை பதிவிறக்கம் செய்தல் மற்றும் இறுதி உறுதிப்படுத்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய முற்றிலும் ஆன்லைன் செயல்முறையாகும்.
பொறியியல் சேர்க்கைக்கான 4 ஆம் கட்ட கவுன்சிலிங்கிற்கான முன்பணம் செலுத்துதல் அக்டோபர் 9 முதல் தொடங்குகிறது. கல்லூரி மற்றும் படிப்புகளை தேர்வு செய்ய அக்டோபர் 13 மற்றும் 14 ஆகிய இரு தினங்களுக்கு அனுமதிக்கப்படும். இடஒதுக்கீடு அக்டோபர் 17 தேதி வழங்கப்படும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil