முழுவதுமாக மெரிட் அடிப்படையிலான சேர்க்கை நடைமுறையை பின்பற்றும் கல்லூரியாக சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி உருவெடுத்துள்ளது. இதனால் பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு என்ன பயன் என்பதை இப்போது பார்ப்போம்.
இதுதொடர்பாக கல்வியாளர் அஸ்வின் வெளியிட்டுள்ள வீடியோவில், டாப் பொறியியல் கல்லூரிகளான சென்னையில் உள்ள ஸ்ரீ சிவசுப்பிரமணிய நாடார் பொறியியல் கல்லூரி எனப்படும் எஸ்.எஸ்.என் கல்லூரி, மதுரையில் உள்ள தியாகராஜர் பொறியியல் கல்லூரி, கோயம்புத்தூரில் உள்ள பி.எஸ்.ஜி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் அப்ளைடு ரிசர்ச் ஆகிய கல்லூரிகளின் வரிசையில் சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி இணைந்துள்ளது.
இந்தக் கல்லூரிகளில் மெரிட் மேனேஜ்மெண்ட் கோட்டா (Merit Management Quota) மட்டுமே உள்ளது. அதாவது மார்க்கிற்கே முன்னுரிமை. கட் ஆஃப் மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே சேர்க்கை நடைபெறும். இந்தச் செயல்முறையை மாணவர்கள் அதிகம் விரும்பும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரி புதிதாக தொடங்கியுள்ள சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் அப்ளைடு ரிசர்ச் கல்லூரி பின்பற்ற உள்ளது. இந்தக் கல்லூரிகளில் நுழைவுத் தேர்வு அடிப்படையில் மேனேஜ்மெண்ட் கோட்டா இடங்கள் நிரப்பப்படும். எனவே குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் சேர்க்கை பெறுவது சிரமம். நல்ல மார்க் எடுத்து டாப் கல்லூரிகளில் படிக்க வேண்டும் என நினைப்பவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil