தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை; அரசு பள்ளி மாணவர்களிடம் அதிகரித்த இன்ஜினியரிங் மவுசு
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கையின் பொதுக் கலந்தாய்வில் 6 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்ற நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீட்டில் அனைத்துக் கல்லூரிகளிலும் 50%க்கும் மேல் இடங்கள் நிரம்பியுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
Advertisment
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 440 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நிறைவு பெற்றுள்ளது.
இந்தநிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் அனைத்து கல்லூரிகளிலும் 50%க்கும் மேற்பட்ட இடங்கள் நிரம்பியுள்ளதாக கல்வியாளர் அஸ்வின் தனது யூடியூப் வீடியோவில் தெரிவித்துள்ளார். 92.5% இடங்களுக்கான பொதுக் கலந்தாய்வில் 6 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேர்க்கைப் பெறவில்லை. ஆனால், மொத்தம் உள்ள 440 கல்லூரிகளிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீட்டில் 50%க்கும் மேலான இடங்கள் நிரம்பியுள்ளன.
குறிப்பாக இந்த ஆண்டு 220 கல்லூரிகளில் 100% இடங்கள் நிரம்பியுள்ளன. 437 கல்லூரிகளில் 70% இடங்கள் நிரம்பியுள்ளன. இவை கடந்த ஆண்டை விட மிக அதிகமாகும்.
Advertisment
Advertisement
இதன்மூலம், பொறியியல் படிக்கும் ஆர்வம் அரசு பள்ளி மாணவர்கள் இடையே அதிகரித்து இருப்பது தெரிய வந்தாலும், அண்ணா பல்கலைக்கழகம் இந்த மாணவர்கள் நலனில் கவனம் செலுத்துவது அவசியம். பொதுக் கலந்தாய்வில் குறைந்த அளவில் சேர்க்கை உள்ள கல்லூரிகளில், 50%க்கும் மேல் அரசு பள்ளி மாணவர்கள் சேர்ந்துள்ளதால், அந்த கல்லூரிகளின் தரம், உள்கட்டமைப்பு, கற்பித்தல் தரம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அஸ்வின் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“