தமிழ்நாடு பொறியியல் சேர்க்கையில் மாணவர்கள் தன்னாட்சி பெற்ற கல்லூரிகளை அதிக அளவில் தேர்வு செய்துள்ள நிலையில், அண்ணா பல்கலைக்கழகம் முக்கிய முடிவை எடுத்துள்ளது.
Advertisment
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 440 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சலிங் நிறைவு பெற்றுள்ளது. இதனையடுத்து முதலாம் ஆண்டு வகுப்புகள் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இந்த மாணவர்கள் தன்னாட்சி பெற்ற பொறியியல் கல்லூரிகளில் சேர அதிக ஆர்வம் காட்டியுள்ளதாக கல்வி ஆலோசகர் தனது யூடியூப் வீடியோவில் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், மொத்தம் உள்ள 440 பொறியியல் கல்லூரிகளில் 101 கல்லூரிகள் தன்னாட்சி பெற்ற கல்லூரிகள். மீதமுள்ள 339 கல்லூரிகள் தன்னாட்சி பெறாத கல்லூரிகள்.
தன்னாட்சி கல்லூரிகள்
மொத்த எண்ணிக்கை : 101
மொத்த இடங்களின் எண்ணிக்கை : 60094
நிரம்பிய இடங்களின் எண்ணிக்கை : 56224
சேர்க்கை விகிதம் : 93.56%
ஆவரேஜ் கட் ஆஃப் : 153.15
தன்னாட்சி பெறாத கல்லூரிகள்
மொத்த எண்ணிக்கை : 339
மொத்த இடங்களின் எண்ணிக்கை : 96236
நிரம்பிய இடங்களின் எண்ணிக்கை : 57980
சேர்க்கை விகிதம் : 60.25%
ஆவரேஜ் கட் ஆஃப் : 127.65
இதன்மூலம் மாணவர்கள் தன்னாட்சி கல்லூரிகளை அதிகம் விரும்புவது தெரிகிறது. இதற்கு தன்னாட்சி கல்லூரிகள் தாங்களாகவே வினாத்தாள் தயாரிப்பது, விடைத்தாள் திருத்துவது போன்ற நடைமுறைகளைச் செய்யும். மாணவர்களும் தங்களுக்கு எதிர்காலத்தில் தேவைப்படும் நெகிழ்வுத் தன்மையைக் கருத்தில் கொண்டு தன்னாட்சி கல்லூரிகளில் குவிந்து வருகின்றனர்.
இதனிடையே அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர், தன்னாட்சி கல்லூரிகளில் மாணவர் தேர்வை சரியாக எழுதினாலும், எழுதாவிட்டாலும் மதிப்பெண் வழங்கப்படுகிறது. எனவே ஒவ்வொரு செமஸ்டரிலும், ஏதேனும் ஒரு வினாத்தாளை அண்ணா பல்கலைக்கழகமே வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார். இதன்மூலம் தன்னாட்சி கல்லூரிகளின் தரத்தை அண்ணா பல்கலைக்கழகம் சரிபார்க்க உள்ளது தெரிகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“