தமிழ்நாடு பொறியியல் கவுன்சிலிங்கிற்கான முதல் ரவுண்ட் தொடங்கியுள்ள நிலையில், சாய்ஸ் ஃபில்லிங் தொடர்பாக மாணவர்கள் அவசியம் தெரிந்துக் கொள்ள வேண்டிய தகவலை இப்போது பார்ப்போம்.
Advertisment
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் பொறியியல் படிப்புகளுக்கு நல்ல மவுசு உள்ளது. மாணவர்கள் பொறியியல் படிப்புகளில் சேர அதிகளவில் விண்ணப்பித்துள்ளனர். இதனால் கட் ஆஃப் மதிப்பெண்ணும் கணிசமாக உயர்ந்துள்ளது.
தற்போது பொறியியல் கவுன்சிலிங்கின் முதல் சுற்று தொடங்கியுள்ள நிலையில், மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் சாய்ஸ் ஃபில்லிங் தொடர்பாக எழுந்துள்ள மிக முக்கிய கேள்விகளுக்கு கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி தனது யூடியூப் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
அதில் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் எழுந்துள்ள மிகப்பெரிய கேள்வி, ஆன்லைனில் கல்லூரி தேர்வு பட்டியலை உறுதி செய்தப் பிறகு மாற்ற முடியுமா அல்லது திருத்த முடியுமா என்பது தான். அதாவது தவறுதலாக, கவனக்குறைவாக, அல்லது பிறரின் தவறான வழிநடத்தலாலோ சாய்ஸ் ஃபில்லிங்கில் கல்லூரி மற்றும் படிப்புகளின் முன்னுரிமைகளை லாக் செய்த பின்னர் அன்லாக் செய்ய முடியுமா என்பது தான். எப்போது சாய்ஸ் ஃபில்லிங் செய்யும்போது கவனமாக செய்ய வேண்டும். முன்பே குறிப்பெடுத்து வைத்துக் கொண்டு நிரப்ப வேண்டும்.
இருப்பினும் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கையில் தவறுதலான சாய்ஸ் ஃபில்லிங்கை சரிசெய்ய வழிவகைச் செய்யப்பட்டுள்ளது. இதற்கு அந்த மாணவர் அருகிலுள்ள டி.எஃப்.சி சென்டருக்கு நேரில் செல்ல வேண்டும். அப்படி செல்லும்போது ஆதார் கார்டு, சான்றிதழ்கள் மற்றும் பதிவுச் செய்யப்பட்ட மொபைல் எண் ஆகியவற்றை அவசியம் எடுத்துச் செல்ல வேண்டும். அங்கு அன்லாக் செய்த பின்னர், நீங்கள் அங்கேயோ அல்லது உங்கள் வீட்டிற்கு வந்து கூட எடிட் செய்துக் கொள்ளலாம். இதை ஒருமுறை மட்டுமே செய்ய முடியும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil