TNEA Counselling: ரவுண்டு 3 மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் சார்ந்த கோர்ஸ்கள் கிடைக்குமா?

தமிழ்நாடு பொறியியல் கவுன்சலிங்; 3-ம் சுற்றுக்கு செல்லும் மாணவர்கள் கவனத்திற்கு; நல்ல கல்லூரியில் இடம் கிடைக்குமா? கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புகள் கிடைக்குமா? முழுவிளக்கம் இங்கே

தமிழ்நாடு பொறியியல் கவுன்சலிங்; 3-ம் சுற்றுக்கு செல்லும் மாணவர்கள் கவனத்திற்கு; நல்ல கல்லூரியில் இடம் கிடைக்குமா? கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புகள் கிடைக்குமா? முழுவிளக்கம் இங்கே

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Engineering

பொறியியல் கல்லூரி மாணவர்கள்

தமிழ்நாடு பொறியியல் கவுன்சலிங்கின் 2 சுற்றுகள் முடிவடைந்த நிலையில், 3 சுற்றில் கலந்துக் கொள்ளும் மாணவர்களுக்கு எந்த கல்லூரிகளில் சீட் கிடைக்கும்? கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்ந்த படிப்புகள் கிடைக்குமா? என்பது உள்ளிட்ட தகவல்களை இப்போது பார்ப்போம்.

Advertisment

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. முதல் சுற்று மற்றும் இரண்டாம் சுற்று கலந்தாய்வு நிறைவடைந்துள்ள நிலையில், இரண்டாம் சுற்றில் இடங்கள் பெற்றவர்கள் கல்லூரிகளில் சேர்க்கைப்பெற்று வருகின்றனர். இதனையடுத்து 3 ஆம் சுற்று கலந்தாய்வு தொடங்க உள்ளது.

இதையும் படியுங்கள்: TNEA Counselling: நீங்க தேர்வு செய்த கல்லூரிகள்… சாய்ஸ் ஃபில்லிங் அவகாசம் முடிகிற நேரத்தில் இதை செக் பண்ணுங்க!

இந்தநிலையில், மூன்றால் சுற்றில் கலந்துக் கொள்ளும் மாணவர்களுக்கு எந்த கல்லூரிகளில் சீட் கிடைக்கும்? கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்ந்த படிப்புகள் கிடைக்குமா? என்பது குறித்த விளக்கங்களை கல்வி ஆலோசகர் சுரேஷ் சீதாராமன் தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார்.

Advertisment
Advertisements

டாப் கல்லூரிகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்ந்த படிப்புகள் கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளன. இரண்டாம் கட்ட கல்லூரிகளில் இன்னும் கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்ந்த படிப்புகளில் இடங்கள் உள்ளன. சில டாப் கல்லூரிகளில் இன்னும் மெக்கானிக்கல், கெமிக்கல் உள்ளிட்ட படிப்புகளில் ஒரு சில பிரிவுகளுக்கான இடங்கள் உள்ளன. தகுதியுள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். பாடப்பிரிவை விட கல்லூரிக்கு முக்கியத்துவம் கொடுங்கள். இன்னும் சில டாப் கல்லூரிகளில் ஒரு சில பிரிவினருக்கு குறிப்பிட்ட பாடப்பிரிவுகளில் இடங்கள் இருக்கு. அதனை பயன்படுத்திக் கொள்ள பாருங்கள். முடிந்தவரை அதிகமான சாய்ஸ்களை கொடுங்கள்.

மூன்றாம் கவுன்சலிங்கில் உங்களுக்கு கிடைத்த இடம் திருப்தி இல்லையென்றால், துணை கலந்தாய்வுக்கு விண்ணப்பியுங்கள். எஸ்.சி மாணவர்கள் உங்களுக்கு கிடைத்த இடம் திருப்தி இல்லை என்றால், கலந்தாய்வின் இறுதியாக நடைபெறும், எஸ்.சி.ஏ – எஸ்.சி கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பிக்கலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Engineering Counselling

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: