தமிழ்நாடு பொறியியல் கவுன்சலிங்கில் முதல் 2 சுற்றுகள் முடிவடைந்து, ரவுண்ட் 3 தொடங்கவுள்ள நிலையில், டாப் கல்லூரிகளில் இன்னமும் இடங்கள் காலியாக உள்ளன. எந்த கல்லூரியில், எந்த இடங்கள் காலியாக உள்ளன என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 442 பொறியியல் கல்லூரிகளில் 1,45,071 இடங்களுக்கான கவுன்சலிங் தொடங்கியுள்ளது. இதில் முதல் இரண்டு சுற்று கலந்தாய்வு முடிவடைந்து உள்ளது. இதனையடுத்து 3 ஆம் சுற்று கலந்தாய்வு சில நாட்களில் தொடங்குகிறது.
இந்தநிலையில், டாப் கல்லூரிகளில் இன்னும் இடங்கள் காலியாக உள்ளதாக கல்வி ஆலோசகர் விவேக் தனது யூடியூப் வீடியோவில் தெரிவித்துள்ளார். சில டாப் கல்லூரிகளில், சில பிரிவினருக்கு இன்னமும் கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி, இ.சி.இ, இ.இ.இ போன்ற படிப்புகளில் இடங்கள் காலியாக உள்ளன. முதல் 2 சுற்றுகளில் பெரும்பாலான மாணவர்கள் கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்ந்த படிப்புகளை தேர்வு செய்ததால், இன்னும் சிவில், மெக்கானிக்கல் போன்ற படிப்புகளில் காலி இடங்கள் உள்ளன.
மாணவர்கள் பாடப்பிரிவை விட கல்லூரிகளுக்கு முக்கியத்துவம் அளித்தால், சிறந்த கல்லூரிகளில் படிக்கலாம். மெக்கானிக்கல் படிப்பை தேர்வு செய்தால், அந்த துறை மட்டுமல்லாது, ஐ.டி, எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட துறைகளிலும் வேலைவாய்ப்பை பெறலாம். கல்லூரி வாரியான காலியிட விவரங்களை கீழ்கண்ட வீடியோவில் தெரிந்துக் கொள்ளலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil