Advertisment

பொறியியல் மாணவர் சேர்க்கை விகிதம்: சென்னையை விட கோவைக்கு அதிக மவுசு; நெல்லை கடைசி இடம்

தமிழ்நாடு பொறியியல் கவுன்சலிங்; மண்டல வாரியாக சேர்க்கை விகிதம்; எந்த மண்டலம், மாவட்டம் முதலிடம் தெரியுமா?

author-image
WebDesk
New Update
Engineering

தமிழ்நாடு பொறியியல் கவுன்சலிங்; மண்டல வாரியாக சேர்க்கை விகிதம்; எந்த மண்டலம், மாவட்டம் முதலிடம் தெரியுமா?

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை கவுன்சலிங் நிறைவு பெற்றுள்ள நிலையில், எந்த மண்டலங்களில் மாணவர்கள் அதிகளவில் சேர்க்கை பெற்றுள்ளனர் என்பதை இப்போது பார்ப்போம்.

Advertisment

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 440 பொறியியல் கல்லூரிகளுக்கான பொதுக் கலந்தாய்வு நிறைவு பெற்றுள்ளது. கலந்தாய்வு மூலம் மொத்தம் 1,02,949 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இருப்பினும் 41,703 இடங்கள் இன்னும் காலியாக உள்ளன.

இந்த நிலையில் மண்டல வாரியாக மாணவர்கள் அதிகளவில் சேர்க்கை பெற்ற மண்டலங்கள் மற்றும் மாவட்டங்கள் எவை என்பதை கல்வியாளர் அஸ்வின் தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார். அதில், அண்ணா பல்கலைக்கழகம் வரையறுத்துள்ள அடிப்படையில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி என 5 மண்டலங்கள் உள்ளன.

மண்டல வாரியாக கல்லூரிகளின் எண்ணிக்கை

சென்னை- 137

கோவை - 131

மதுரை- 37

திருச்சி - 68

திருநெல்வேலி - 67

சென்னை மண்டலத்தில் 46743 இடங்கள் இருந்த நிலையில், 34546 இடங்கள் நிரம்பியுள்ளன. சேர்க்கை விகிதம் 73.91

கோவை மண்டலத்தில் 55414 இடங்கள் இருந்த நிலையில், 46204 இடங்கள் நிரம்பியுள்ளன. சேர்க்கை விகிதம் 83.38

மதுரை மண்டலத்தில் 11303 இடங்கள் இருந்த நிலையில், 7607 இடங்கள் நிரம்பியுள்ளன. சேர்க்கை விகிதம் 67.30

திருச்சி மண்டலத்தில் 22036 இடங்கள் இருந்த நிலையில், 13850 இடங்கள் நிரம்பியுள்ளன. சேர்க்கை விகிதம் 62.85

திருநெல்வேலி மண்டலத்தில் 20834 இடங்கள் இருந்த நிலையில், 11997 இடங்கள் நிரம்பியுள்ளன. சேர்க்கை விகிதம் 57.58

இதன்மூலம் சென்னை மண்டலத்தை விட கோவை மண்டலம் அதிக இடங்களை நிரப்பியுள்ளது. மாணவர்கள் கோவை மண்டலத்தை அதிகம் விரும்புவது தெரிகிறது.

மாவட்ட வாரியாக எடுத்துக் கொண்டால், 91.39% சேர்க்கையுடன் கோயம்புத்தூர் முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடங்களில் நாமக்கல், காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு உள்ளன. சென்னை மாவட்டத்தில் 7 கல்லூரிகள் மட்டுமே உள்ளதால், சேர்க்கை விகிதம் அதிகம் இருந்தாலும், எண்ணிக்கை குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Engineering
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment