Advertisment

TNEA 2023: இன்ஜினியரிங் படிப்புகளில் இத்தனை பிராஞ்ச்களா? கம்ப்யூட்டர் சயின்ஸில் டாப் 10 பாடப்பிரிவுகள் எவை?

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைகளில் 93 பிராஞ்ச்கள்; கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்ந்த டாப் 10 பாடப்பிரிவுகளின் பட்டியல் இங்கே

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil News

Tamil News Updates

தமிழகத்தில் பொறியியல் (Engineering) படிப்புகளில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பாடப்பிரிவுகள் என்னென்ன? அவற்றில் டாப் பாடப்பிரிவுகள் என்னென்ன, டாப் 10 கம்ப்யூட்டர் சயின்ஸ் (Computer Science) சார்ந்த பாடப்பிரிவுகள் என்னென்ன என்பது குறித்து இப்போது பார்ப்போம்.

Advertisment

தமிழகத்தில் பொறியியல் (TNEA) படிப்புகளுக்கான விண்ணப்பச் செயல்முறை தொடங்கியுள்ளது. மாணவர்கள் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர். இதுவரை 60000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்: சி.பி.எஸ்.இ ரிசல்ட்க்குப் பிறகு பொறியியல் கட் ஆஃப் எப்படி இருக்கும்? கல்வியாளர் அஷ்வின் விளக்கம்

இந்தநிலையில் அண்ணா பல்கலைக்கழகம் (Anna University) பொறியியல் படிப்புகளில் புதிதாக பல்வேறு பாடப்பிரிவுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அவற்றில் டாப் பாடப்பிரிவுகள் எவை என்பதை இங்கே பார்ப்போம். கல்வியாளர் ரமேஷ்பிரபா தனது யூடியூப் பக்கத்தில் இந்த பட்டியலை வழங்கியுள்ளார்.

அந்த வீடியோவில், அண்ணா பல்கலைக்கழகம் இந்த ஆண்டு 93 பொறியியல் பாடப்பிரிவுகளுக்கு சேர்க்கை நடத்த உள்ளது. ஆனால் பெரும்பாலான மாணவர்கள் ஒரு சில முதன்மை பாடப்பிரிவுகளை தவிர, வேறு எதிலும் கவனம் செலுத்துவதில்லை.

ஒட்டுமொத்த அளவில் புதிய டாப் பொறியியல் பாடப்பிரிவுகள்

  1. Civil and Structural Engineering
  2. Civil Engineering and Planning
  3. Information Science and Engineering
  4. Mechanical and Mechatronics Engineering (Additive Manufacturing)

கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் டாப் பாடப்பிரிவுகள்

  1. Computer Science and Engineering
  2. Computer Science and Engineering (SS)
  3. Computer Technology
  4. Computer Science and Technology
  5. Computer and Communication Engineering
  6. Computer Science and Business System
  7. Computer Science and Engineering (Artificial Intelligence and Machine Learning)
  8. Computer Science and Engineering (Big Data Analytics)
  9. Computer Science and Engineering (Internet of Things and Cyber Security including Block Chain Technology)
  10. Computer Science and Engineering (Artificial Intelligence and Data Science)

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Engineering
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment