தமிழ்நாடு பொறியியல் கவுன்சிலிங் விரைவில் தொடங்க உள்ள நிலையில், எந்த கட் ஆஃப் மதிப்பெண்ணுக்கு எந்த ரவுண்ட் கவுன்சிலிங் என்பது குறித்த விவரங்களை இப்போது பார்ப்போம்.
Advertisment
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் அடுத்ததாக கவுன்சிலிங்கிற்கு தயாராக வேண்டும். அதற்கு தேவையான ஆவணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மேலும் உங்கள் கட் ஆஃப் மதிப்பெண்ணுக்கான கவுன்சிலிங் எது என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
இந்தநிலையில், யாருக்கு எந்த ரவுண்ட் கவுன்சிலிங் என்பதை கல்வியாளர் அஸ்வின் தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார். அதில், தமிழ்நாடு பொறியியல் கவுன்சிலிங் 4 ரவுண்ட்களாக நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட கட் ஆஃப் மதிப்பெண் உள்ளவர்கள் வரை ஒவ்வொரு கவுன்சிலிங்கிற்கும் அழைக்கப்படுவார்கள். முதல் ரவுண்டில் 14000 முதல் 15000 தரவரிசை வரை உள்ள மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடைபெறும். இரண்டாவது ரவுண்டில் 45000 தரவரிசை வரை உள்ளவர்களுக்கு கவுன்சிலிங் நடைபெறும். மீதமுள்ளவர்களில் சுமார் 45% பேருக்கு மூன்றாம் ரவுண்டிலும், 55% பேருக்கு நான்காவது ரவுண்டிலும் கவுன்சிலிங் நடைபெறும். இதுதான் வழக்கமான நடைமுறை.
Advertisment
Advertisements
அதன்படி, இந்த ஆண்டில் முதல் ரவுண்டில் 200இலிருந்து 183.5 வரையிலான கட் ஆஃப் மதிப்பெண் வரை உள்ளவர்களுக்கு கவுன்சிலிங் நடைபெறும். இரண்டாவது ரவுண்டில் 183.49இலிருந்து 162 வரையிலான கட் ஆஃப் மதிப்பெண் வரை உள்ளவர்களுக்கு கவுன்சிலிங் நடைபெறும். மூன்றாவது ரவுண்டில் 161.99இலிருந்து 134 அல்லது 133 வரையிலான கட் ஆஃப் மதிப்பெண் வரை உள்ளவர்களுக்கு கவுன்சிலிங் நடைபெறும். நான்காவது ரவுண்டில் 133.99இலிருந்து 77.5 வரையிலான கட் ஆஃப் மதிப்பெண் வரை உள்ளவர்களுக்கு கவுன்சிலிங் நடைபெறும்.
கடந்த ஆண்டைப் போலவே 199 மதிப்பெண்கள் வரை எந்த மாற்றமும் இருக்காது. அதேநேரம் 199 முதல் 197 மதிப்பெண்கள் வரை 0.5 கட் ஆஃப் அதிகரிக்க உள்ளது. 196 முதல் 192.5 வரை கட் ஆஃப் மதிப்பெண்ணில் மாற்றம் இருக்காது. 192 முதல் 188 வரை கட் ஆஃப் 0.5 குறையும். 187 முதல் 181 வரை 1 கட் ஆஃப் குறையும். 181.25 முதல் 170 வரை 1.25 கட் ஆஃப் குறையும். 166 முதல் 160 வரை 1 கட் ஆஃப் குறையும். ஆனால், 160 முதல் 130 வரை 2-8 கட் ஆஃப் அதிகரிக்கும். 125க்கு கீழ் 10 முதல் 30 வரை கட் ஆஃப் அதிகரிக்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil