தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கவுன்சிலிங் தொடங்கியுள்ள நிலையில், இந்த ஆண்டு எந்த படிப்புக்கு மவுசு அதிகம்? அதிக இடங்கள் உள்ள பிரிவு எது என்பது உள்ளிட்ட தகவல்களை இப்போது பார்ப்போம்.
Advertisment
தமிழகத்தில் இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் செயல்முறை தொடங்கியுள்ளது. இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் இந்த ஆண்டுக்கான கல்லூரிகள் மற்றும் படிப்புகள் அடங்கிய இன்டேக் விவரங்களை வெளியிட்டுள்ளது. இந்தநிலையில், இதுதொடர்பாக விரிவான விளக்கங்களுடன் கல்வியாளர் அஸ்வின் வீடியோ வெளியிட்டுள்ளார்.
ஸ்ரீ நந்தனம் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, வேலூர்,
சேரன் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், கரூர்
இந்த ஆண்டு புதிதாக கவுன்சிலிங்கில் ஒரு கல்லூரி சேர்ந்துள்ளது. அது, சென்னை இன்ஸ்டிடியூட் டெக்னாலஜி அண்ட் அப்ளைடு ரிசர்ச், சென்னை
இந்த ஆண்டு மொத்தம் 100 பொறியியல் பாடப்பிரிவுகள் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலான கல்லூரிகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்ந்த பிரிவுகளில் இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. கணினி சார்ந்த பிரிவுகளில் 25% அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அதேநேரம் முக்கிய பாடப்பிரிவுகளான இ.சி.இ, இ.இ.இ, கெமிக்கல், ரோபாட்டிக்ஸ், மெக்கானிக்கல், சிவில், ஏரோநாட்டிகல் உள்ளிட்ட படிப்புகளில் இடங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil