தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங் செயல்முறை விரைவில் தொடங்கவுள்ள நிலையில், இந்த ஆண்டு இன்ஜினியரிங் கட் ஆஃப் ஏற்ற இறக்கமாக இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
Advertisment
தமிழகத்தில் இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கு கடந்த ஆண்டை விட 20000க்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். எனவே கட் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. அதேநேரம் குறிப்பிட்ட கட் ஆஃப் ரேஞ்ச் வரை பெரிய மாற்றம் இருக்காது அல்லது குறைய வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.
இந்தநிலையில், இந்த ஆண்டு பொறியியல் படிப்புகளுக்கான கட் ஆஃப் எந்த ரேஞ்சுக்கு எப்படி இருக்கும் என கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், கடந்த ஆண்டு 200க்கு 200 மதிப்பெண்களில் 132 பேர் இருந்த நிலையில், இந்த ஆண்டு 102 பேர் தான் உள்ளனர். 195க்கு மேல் 3058 மாணவர்கள் உள்ளனர். அதேநேரம் கடந்த ஆண்டு 3018 மாணவர்கள் இருந்தனர். 190க்கு மேல் 6899 மாணவர்கள் உள்ளனர். அதேநேரம் கடந்த ஆண்டு 8299 மாணவர்கள் இருந்தனர். எனவே 190 முதல் 200 வரையிலான கட் ஆஃப் மதிப்பெண்களில் 0.25 – 0.5 குறைய வாய்ப்புள்ளது.
Advertisment
Advertisements
185க்கு மேல் 12970 மாணவர்கள் உள்ளனர். அதேநேரம் கடந்த ஆண்டு 14435 மாணவர்கள் இருந்தனர். 180க்கு மேல் 18825 மாணவர்கள் உள்ளனர். அதேநேரம் கடந்த ஆண்டு 20376 மாணவர்கள் இருந்தனர். எனவே 180 – 190 வரை 0.5 கட் ஆஃப் குறைய வாய்ப்புள்ளது.
175க்கு மேல் கடந்த ஆண்டில் 27,256 பேர் இருந்த நிலையில், இந்த ஆண்டு 25561 மாணவர்கள் உள்ளனர். 170க்கு மேல் கடந்த ஆண்டில் 35103 பேர் இருந்த நிலையில், இந்த ஆண்டு 33054 மாணவர்கள் உள்ளனர். எனவே 170 – 180 வரை 0.5 - 1 கட் ஆஃப் குறைய வாய்ப்புள்ளது.
160க்கு மேல் கடந்த ஆண்டில் 50208 பேர் இருந்த நிலையில், இந்த ஆண்டு 50183 மாணவர்கள் உள்ளனர். எனவே கட் ஆஃப் கடந்த ஆண்டை போலவே இருக்கும். 140க்கு மேல் கடந்த ஆண்டில் 80104 பேர் இருந்த நிலையில், இந்த ஆண்டு 91547 மாணவர்கள் உள்ளனர். எனவே கட் ஆஃப் 2-5 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. 120க்கு மேல் கடந்த ஆண்டில் 110406 பேர் இருந்த நிலையில், இந்த ஆண்டு 135919 மாணவர்கள் உள்ளனர். எனவே கட் ஆஃப் 5-10 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அந்த வீடியோவில் ஜெயபிரகாஷ் காந்தி கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil