தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான கவுன்சலிங் நிறைவு பெற்றுள்ள நிலையில், மாணவர்கள் அதிகம் விரும்பிய அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகள் எவை என்பது இப்போது பார்போம்.
Advertisment
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 442 இன்ஜினியரிங் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நிறைவு பெற்றுள்ளது. கலந்தாய்வு மூலம் மொத்தம் 1,02,949 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இருப்பினும் 41,703 இடங்கள் இன்னும் காலியாக உள்ளன.
இந்தநிலையில், டாப் இடங்களில் இடம் பிடித்த அரசு மற்றும் தனியார் கல்லூரிகளின் பட்டியலை கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி தனது யூடியூப் வீடியோவில் வெளியிட்டுள்ளார். அதில் சராசரி கட் ஆஃப் 160க்கு மேல் உள்ள கல்லூரிகளை டாப் கல்லூரிகள் என வரிசைப்படுத்தலாம். அந்த வகையில் 42 கல்லூரிகள் டாப் கல்லூரிகளாக இடம் பெற்றுள்ளன. இதில் சுயநிதி கல்லூரிகளில் 27 கல்லூரிகள் உள்ளன. 15 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் உள்ளன.
டாப் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் மற்றும் ஆவரேஜ் கட் ஆஃப்
Advertisment
Advertisement
1.எஸ்.என்.என் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் – 191.15
2.பி.எஸ்.ஜி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் அப்ளைடு ரிசர்ச் – 186.35
3.சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி – 186.31
4.ராஜலெட்சுமி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி – 179.89
5.சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் அப்ளைடு ரிசர்ச் – 179.12
6.ஸ்ரீ கிருஷ்ணா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி – 177.23
7.குமரகுரு காலேஜ் ஆஃப் டெக்னாலஜி – 177.17
8.ராஜலெட்சுமி இன்ஜினியரிங் காலேஜ் – 176.73
9.லயோலா ஐகேம் – 176.45
10.ஆர்.எம்.கே இன்ஜினியரிங் காலேஜ் – 175.21
11.ஸ்ரீ வெங்கடேஸ்வரா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் – 175.11
12.ஸ்ரீ ஈஸ்வர் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் – 173.80
13.கே.பி.ஆர் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி – 170.93
14.ஆர்.எம்.டி இன்ஜினியரிங் காலேஜ் – 170.33
15.ஸ்ரீ கிருஷ்ணா காலேஜ் ஆஃப் டெக்னாலஜி – 169.59
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் மற்றும் ஆவரேஜ் கட் ஆஃப்
11.எம்.ஐ.டி கேம்பஸ், சென்னை – 191.31
22.கிண்டி பொறியியல் கல்லூரி – 190.99
33.சிக்ரி, காரைக்குடி – 189.83
44.கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி – 186.30
55.தியாகராஜா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், மதுரை – 185.83
மீதமுள்ள கல்லூரிகளின் பட்டியலை தெரிந்துக் கொள்ள கீழ்காணும் வீடியோவைக் காணுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“