Advertisment

TNEA Counselling: பொறியியல் கவுன்சலிங்கில் இந்த 3 மத்திய கல்வி நிறுவனங்களை மனசுல வையுங்க!

மத்திய கல்வி நிறுவனம், ஆனால் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை மூலம் அட்மிஷன்; என்னென்ன படிப்புகள் தெரியுமா?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil News

Tamil News Updates

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கையின் கீழ் படிப்புகளை வழங்கும் தமிழகத்தில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்கள் எவை? அவற்றில் வழங்கப்படும் படிப்புகள் என்னென்ன என்பதை இப்போது பார்ப்போம்.

Advertisment

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பச் செயல்முறை தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் மாணவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர். இந்தநிலையில், தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை மூலம் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளுடன் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களிலும் சேர்க்கை பெறலாம். தமிழகத்தில் அமைந்துள்ள இந்த கல்வி நிறுவனங்களில் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கையின் கீழ் 12 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களைக் கொண்டே சேர்க்கை நடைபெறும்.

இதையும் படியுங்கள்: முன்கூட்டியே தொடங்கும் என்ஜினீயரிங் கலந்தாய்வு: புதிய தேதியை வெளியிட்ட அமைச்சர்

இந்த நிலையில், மத்திய அரசின் எந்தெந்த கல்வி நிறுவனங்கள் என்னென்ன படிப்புகளை வழங்குகிறது என்பது தொடர்பாக கல்வியாளர் ரமேஷ்பிரபா தனது யூடியூப் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், மூன்று மத்திய கல்வி நிறுவனங்கள் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை மூலம் படிப்புகளை வழங்குகின்றன.

1). Central Institute of Plastic Engineering and Technology (CIPET), Guindy Chennai

வழங்கப்படும் படிப்புகள்

1. Plastic Technology

2. Manufacturing Engineering

இந்த Manufacturing Engineering அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரிக்கு அடுத்தப்படியாக இந்த கல்வி நிறுவனத்தில் தான் உள்ளது.

2). Central Electro Chemical Research Institute (CECRI), Karaikudi

வழங்கப்படும் படிப்பு

Chemical and Electro Chemical Engineering

முதற்கட்ட கவுன்சலிங்கிலே 100% நிரம்பும் பாடப்பிரிவு இதுவாகும்.

3). Indian Institute of Handloom Technology (IIHT), Salem

வழங்கப்படும் படிப்பு

Handloom and Textiles Technology

மாணவர்கள் சிறந்த வேலை வாய்ப்புகளைக் கொண்டுள்ள இந்தப் படிப்புகளை விருப்பம் இருந்தால் தேர்வு செய்து படிக்கலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Engineering
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment