தமிழ்நாடு பொறியியல் சேர்க்கையின் கீழ் படிப்புகளை வழங்கும் தமிழகத்தில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்கள் எவை? அவற்றில் வழங்கப்படும் படிப்புகள் என்னென்ன என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பச் செயல்முறை தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் மாணவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர். இந்தநிலையில், தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை மூலம் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளுடன் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களிலும் சேர்க்கை பெறலாம். தமிழகத்தில் அமைந்துள்ள இந்த கல்வி நிறுவனங்களில் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கையின் கீழ் 12 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களைக் கொண்டே சேர்க்கை நடைபெறும்.
இந்த நிலையில், மத்திய அரசின் எந்தெந்த கல்வி நிறுவனங்கள் என்னென்ன படிப்புகளை வழங்குகிறது என்பது தொடர்பாக கல்வியாளர் ரமேஷ்பிரபா தனது யூடியூப் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
Advertisment
Advertisement
அந்த வீடியோவில், மூன்று மத்திய கல்வி நிறுவனங்கள் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை மூலம் படிப்புகளை வழங்குகின்றன.
1). Central Institute of Plastic Engineering and Technology (CIPET), Guindy Chennai
வழங்கப்படும் படிப்புகள்
1. Plastic Technology
2. Manufacturing Engineering
இந்த Manufacturing Engineering அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரிக்கு அடுத்தப்படியாக இந்த கல்வி நிறுவனத்தில் தான் உள்ளது.
2). Central Electro Chemical Research Institute (CECRI), Karaikudi
வழங்கப்படும் படிப்பு
Chemical and Electro Chemical Engineering
முதற்கட்ட கவுன்சலிங்கிலே 100% நிரம்பும் பாடப்பிரிவு இதுவாகும்.
3). Indian Institute of Handloom Technology (IIHT), Salem
வழங்கப்படும் படிப்பு
Handloom and Textiles Technology
மாணவர்கள் சிறந்த வேலை வாய்ப்புகளைக் கொண்டுள்ள இந்தப் படிப்புகளை விருப்பம் இருந்தால் தேர்வு செய்து படிக்கலாம்.