பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள், எந்த வகையான கல்லூரியில் சேர்ந்து படிப்பது தங்கள் எதிர்காலத்திற்கு சிறந்தது என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
தமிழகத்தில் பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கையில் பங்கேற்று கல்லூரியை தேர்வு செய்வர். சிலர் ஜே.இ.இ தேர்வு மூலம் சேர்க்கை பெறுவர். அதேநேரம், பொறியியல் படிப்புகளை மூன்று விதமான கல்லூரிகள் வழங்குகின்றன. அவை தன்னாட்சி பெற்ற கல்லூரிகள் (Autonomous), தன்னாட்சி பெறாத கல்லூரிகள் (Non-Autonomous), நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் (Deemed Universities).
இந்த நிலையில் எந்த வகையான கல்லூரியில் இன்ஜினியரிங் படிப்பது சிறந்தது என கல்வி ஆலோசகர் அஸ்வின் தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார்.
அதன்படி, அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் தன்னாட்சி பெறாத கல்லூரிகள் 300க்கு மேல் தமிழகத்தில் உள்ளன. இங்கு அண்ணா பல்கலைக்கழகத்தால் பட்டம் வழங்கப்படும். இங்கு சிலபஸ் ஒரே மாதிரியாக இருக்கும். அதனால் சிலபஸை உடனடியாக மாற்ற முடியாது. இங்கு வேலை வாய்ப்பு திறன்கள் குறைவாக இருக்கும்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் தன்னாட்சி பெற்ற கல்லூரிகள் 86 தமிழகத்தில் உள்ளன. இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக் கூடும். இங்கு அண்ணா பல்கலைக்கழகத்தால் பட்டம் வழங்கப்படும். இங்கு சிலபஸ் கல்லூரிகளுக்கு இடையே வேறுபடும். ஆனால் தொழில்துறைக்கு ஏற்ப அவ்வப்போது சிலபஸை மாற்றிக் கொள்ளலாம். இங்கு சிறந்த வேலை வாய்ப்பு திறன்கள் வழங்கப்படும்.
நிகர்நிலை பல்கலைக்கழகங்களில், அவற்றின் பெயரால் பட்டங்கள் வழங்கப்படும். சிலபஸில் மாறுபாடுகள் இருக்கும். ஆனால் தொழில்துறைக்கு ஏற்ப அவ்வப்போது சிலபஸை மாற்றிக் கொள்ளலாம். இங்கு சிறந்த வேலை வாய்ப்பு திறன்கள் வழங்கப்படும்.
எனவே மாணவர்கள், கல்லூரிகளை நேரடியாக சென்று பார்த்து, உள்கட்டமைப்பு வசதிகள், வேலை வாய்ப்பு உள்ளிட்டவற்றை ஆராய்ந்து, கல்லூரிகளை தேர்வு செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“