பொறியியல் கவுன்சலிங் விரைவில் தொடங்க உள்ள நிலையில், தமிழகத்தின் முதன்மை பொறியியல் கல்வி நிறுவனமான கிண்டி பொறியியல் கல்லூரிக்கான கட் ஆஃப் நிலவரத்தை இப்போது பார்ப்போம்.
Advertisment
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. தேர்வு முடிவுகள் மே 6 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்தநிலையில், தமிழகத்தின் முதன்மை கல்வி நிறுவனமான அண்ணா பல்கலைக்கழகத்தின் சி.இ.ஜி எனப்படும் கிண்டி பொறியியல் கல்லூரியில் எவ்வளவு கட் ஆஃப் வரை இடங்கள் கிடைக்கும் என்பதை கல்வி ஆலோசகர் அஸ்வின் தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார்.
அதன்படி, கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புகளுக்கு கட் ஆஃப் பெரும்பாலும் 199க்கு மேல் உள்ளது. பொதுப் பிரிவு மற்றும் பி.சி மாணவர்கள் கம்ப்யூட்டர் சயின்ஸ் எடுக்க விரும்பினால் 199க்கு மேல் கட் ஆஃப் அவசியம். இ.சி.இ படிப்புக்கு 199.50 கட் ஆஃப் தேவை. சிவில் மற்றும் மெக்கானிக்கல் தமிழ் மீடியம் படிப்புகளுக்கு 175க்கு மேல் கட் ஆஃப் இருந்தால் போதும். அதிகம் விரும்பப்படாத பிரிண்டிங், அக்ரி, மைனிங் போன்ற படிப்புகளுக்கு கட் ஆஃப் சற்று குறைவாக உள்ளது.
அதேநேரம், பி.சி.எம், எம்.பி.சி, எஸ்.சி, எஸ்.சி.ஏ, எஸ்.டி பிரிவுகளுக்கு 1 முதல் 5 வரை கட் ஆஃப் குறைய வாய்ப்புள்ளது. தமிழக அரசு வேலையை குறிவைப்பவர்கள் சிவில் தமிழ் மீடியம் படிப்பை தேர்வு செய்யலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“