/indian-express-tamil/media/media_files/KTRg5XxPMAbr8qw1XQbL.jpg)
பொறியியலில் படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வு ஜூலை 22 முதல் தொடங்க உள்ளது. 7.5 சதவீத இடஒதுக்கீடு உள்பட சிறப்பு பிரிவுக்கான கலந்தாய்வு முதலில் நடைபெற உள்ளது. கலந்தாய்வில் சாய்ஸ் ஃபில்லிங் மிக மிக முக்கியமானது, கவனமாக செய்ய வேண்டும் என கல்வியாளர் சுரேஷ் சீதாராமன் கூறியுள்ளார்.
அவர் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், பொறியியல் படிப்பு, கவுன்சிலிங் பற்றி கூறியுள்ளார். தமிழகத்தில் உள்ள மொத்தம் 446 பொறியியல் கல்லூரிகளில் இந்தாண்டு புதிதாக 10,000 இடங்கள் அதிகரிக்க உள்ளன எனக் கூறப்பட்டுள்ளது. இதில் 8 புதிய படிப்புகள் அறிமுகம் செய்ய உள்ளன. 1. Electrical and Computer Engineering, 2. Electronics and Computer Engineering, 3. ECE (VLSI), 4. ECE (ACE) 5. Automobile Engineering , 6.Electronics and Instumentational control (EIC) 7. B.Des (Bachelor Design) 8. I&C Intsrumentational and control
மேல் கூறப்பட்டுள்ளளபடி 1-4 படிப்புகள் கட்டாயம் டாப் கல்லூரிகளில் தேர்வு செய்து படிக்கலாம். மீண்டும் ஆட்டோ மொபைல் என்ஜினியரிங் வளர்ந்து வருகிறது. எலக்ட்ரிக் வாகனங்கள் வளர்ச்சியால் இதனை தேர்வு செய்யலாம். EIC இந்தப் படிப்பில் மீட்டர், கேஜெட் தொடர்பாக அளவீடுகள் தொடர்பான படிப்புகளை படிப்பாகும். B.Des என்பது இன்டீரியர் டிசைன் தொடர்பாக இதில் படிக்கலாம். சிவில் படிப்புகள் இருக்கும் போது வீடுகள் கட்டும் போது இன்டீரியர் டிசைன் செய்கிறோம் அது பற்றிய படிப்பாகும். அடுத்து இந்தாண்டு மெக்கானிக்கல், சிவின் படிப்புகளில் 3000 இடங்கள் குறைக்கப்பட்டுள்ளது. சிறிய அளவிலான கல்லூரிகளில் இடங்கள் குறைக்கப்பட்டுள்ளது.
ஸ்பெஷல் கோட்டா இடஒதுக்கீட்டில் குறிப்பிட்ட இடங்கள் தான் ஒதுக்கப்படும். குறிப்பிட்ட கல்லூரிகளில் நிறைய சாய்ஸ் ஃபில்லிங் செய்யும் போது இது கிடைக்கும். ஸ்பெஷல் கோட்டாவில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டிற்கு தான் முதல் இட ஒதுக்கீடு செய்யப்படும். சாய்ஸ் ஃபில்லிங் செய்ய போகும் முன் தேர்வு செய்யும் கல்லூரி மற்றும் படிப்புகளை நோட் போட்டு எழுதி தயார் நிலையில் வைக்க வேண்டும் என டிப்ஸ் வழங்கப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.