தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளில் பொறியியல் படிக்க விருப்பத்துடன் உள்ள மாணவர்களே உங்களுடய கட் ஆஃப் மதிப்பெண் என்ன என்று அறிந்துகொள்ளுங்கள். இந்த கட் ஆஃப் மதிப்பெண் இருந்தால் டாப் 15 கல்லூரிகளில் இடம் கிடைக்கும் மிஸ் பண்ணாதீங்க படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பதற்கு விண்ணப்பித்து கவுன்சிலிங்கிற்காக காத்திருக்கும் மாணவர்களா நீங்கள். உங்களுக்கு உதவி செய்ய கரியர் கய்டன்ஸ் அஷ்வின் அவருடைய யூடியூப் சேனலில் சில அட்வைஸ்களைக் கூறுகிறார்க் கேளுங்கள்.
மாணவர்களே உங்களுடைய பொறியில கட் ஆஃப் 195 அல்லது அதற்கு மேல் மதிப்பெண்களா அப்படியென்றால், தமிழ்நாட்டில் டாப் 5 கல்லூரிகளில் உங்களுக்கு சீட் கிடைத்துவிடும். இப்படியான மாணவர்கள், 250, 450வது இடத்தில் இருக்கக்கூடிய கல்லூரிகளைத் தேடிப் போகக் கூடாது என்று அறிவுறுத்துகிறார்.
அதே போல, 190 கட் ஆஃப் மதிப்பெண் வைத்துள்ள மாணவர்களுக்கு தமிழ்நாட்டில் டாப் 10 கல்லூரிகளில் இடம் கிடைக்கும்.
அதே போல, 185 கட் ஆஃப் மதிப்பெண் வைத்துள்ள மாணவர்களுக்கு தமிழ்நாட்டில் டாப் 15 கல்லூரிகளில் சீட் கிடைக்கும். பொறியியல் படிப்பில், நீங்கள் விரும்பிய துறையைத் தேர்வு செய்து படிக்கலாம் என்று கரியர் கய்டன்ஸ் அஷ்வின் மாணவர்களுக்கு பரிந்துரை செய்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“