பொறியியல் கல்லூரி கவுன்சலிங் 2024-ல் மாணவர்கள் தாங்கள் படிக்கும் கல்லூரியைத் தேர்வு செய்வதற்கு முன்பு, உங்களுடைய கட் ஆஃப் மதிப்பெண் எவ்வளவு, உங்கள் மதிப்பெண்ணுக்கு எந்த கல்லூரிகளில் நீங்கள் விரும்பும் துறையில் இடம் கிடைக்கும், அதற்கான டாப் 100 பொறியியல் கல்லூரிகளின் பட்டியலை இங்கே தருகிறோம். இதை நோட் பண்ணுங்க.
தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 433 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2024 கவுன்சலிங் தொடங்கியுள்ளது. சிறப்பு பிரிவு முடிவடைந்து பொதுப் பிரிவினருக்கான கவுன்சலிங் தொடங்கியுள்ளது.
பொறியியல் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் விண்ணப்பித்துள்ள மாணவரா நீங்கள், உங்கள் கட் ஆஃப் மதிப்பெண்ணுக்கு எந்த வரிசையில் உள்ள கல்லூரிகளில் இடம் கிடைக்கும், தமிழகத்தில் உள்ள டாப் 100 பொறியியல் கல்லூரிகள் எவை என்பதை கல்வி ஆலோசகர் தினேஷ் பிரபு தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார்.
1). அண்ணா பல்கலைக்கழகத்தின் சி.இ.ஜி கேம்பஸ், சென்னை
2). அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்.ஐ.டி கேம்பஸ், சென்னை
3). பி.எஸ்.ஜி காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, கோவை
4). எஸ்.எஸ்.என் எனப்படும் ஸ்ரீ சிவசுப்பிரமணிய நாடார் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், செங்கல்பட்டு
5). கோயம்புத்தூர் தொழில்நுட்பக் கல்லூரி, கோவை
6). அண்ணா பல்கலைக்கழகத்தின் ஏ.சி.டெக் கேம்பஸ், சென்னை
7). அரசு தொழில்நுட்பக் கல்லூரி, கோவை
8). தியாகராஜர் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், மதுரை
9). சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, சென்னை
10). பி.எஸ்.ஜி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் அப்ளைடு ரிசர்ச், கோவை
11). குமரகுரு காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, கோவை
12). ஸ்ரீவெங்கடேஸ்வரா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், சென்னை
13). ஸ்ரீகிருஷ்ணா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கோவை
14). சவீதா இன்ஜினியரிங் காலேஜ், சென்னை
15). ஸ்ரீ ஈஸ்வர் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், கோவை
16). ஆர்.எம்.கே இன்ஜினியரிங் காலேஜ், சென்னை
17). செயிண்ட் ஜோசப் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், சென்னை
18). பண்ணாரி அம்மன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, ஈரோடு
19). ஸ்ரீராமகிருஷ்ணா இன்ஜினியரிங் காலேஜ், கோவை
20). ராஜலெட்சுமி இன்ஜினியரிங் காலேஜ், சென்னை
21). ஸ்ரீசாய்ராம் இன்ஜினியரிங் காலேஜ், சென்னை
22). கொங்கு இன்ஜினியரிங் காலேஜ், ஈரோடு
23). கற்பகம் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், கோவை
24). கே.பி.ஆர் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கோவை
25). வி.எஸ்.பி இன்ஜினியரிங் காலேஜ், கரூர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“