TNEA 2024: பொறியியல் கவுன்சலிங் 3-ம் சுற்று மாணவர்கள் உஷார்! இந்த தவறுகளை செய்யாதீங்க!
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2024 கவுன்சலிங்: 2 சுற்றில் நிறைய மாணவர்கள் செய்த தவறு இதுதான்! 3 ஆம் சுற்றில் கலந்துக் கொள்ளும் மாணவர்கள் இந்த தவறுகளை செய்ய வேண்டாம்
பொறியியல் கவுன்சலிங்கின் இரண்டாவது சுற்றில் நிறைய மாணவர்கள் தவறு செய்துள்ளனர். இதனால் அவர்களுக்கு இரண்டாம் சுற்றில் விரும்பிய இடம் கிடைக்காமல் போகலாம் என கல்வி ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
Advertisment
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இரண்டு சுற்றுகள் முடிவடைந்து 3 ஆம் சுற்று கலந்தாய்வு தொடங்க உள்ளது.
இந்தநிலையில், இரண்டாம் சுற்றில் மாணவர்கள் செய்த தவறுகளையும், 3 ஆவது சுற்றுக்கு செல்பவர்கள் செய்ய வேண்டியவற்றையும் கல்வி ஆலோசகர் சுரேஷ் சீதாராமன் தனது யூடியூப் வீடியோவில் வெளியிட்டுள்ளார்.
இரண்டாம் சுற்றில் நிறைய மாணவர்கள் சமூக ஊடகங்களில் வெளியாகும் தவறான தகவல்களின் தாக்கத்தால் தவறான சாய்ஸ் ஃபில்லிங் செய்துள்ளீர்கள். சிலர் இருக்கை ஒதுக்கீட்டை முடிவு செய்வதிலும் தவறு செய்துள்ளீர்கள்.
இரண்டாம் சுற்றில் நிறைய மாணவர்கள் அப்வேர்ட் கொடுத்துள்ளீர்கள். ஆனால் பெரிய மாற்றங்களுக்கு வாய்ப்பில்லை. நிறைய பேர் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புகள் மற்றும் இ.சி.இ படிப்பை மட்டும் குறிவைத்து சாய்ஸ் ஃபில்லிங் செய்துள்ளீர்கள். ஆனால் டாப் கல்லூரிகளில் இடம் கிடைக்கவில்லை.
சில மாணவர்கள் இரண்டாம் சுற்று சீட் ஒதுக்கீட்டை ஏற்க மறுத்து, 3 ஆம் சுற்றுக்கு சென்றுள்ளீர்கள். இது தவறான விஷயம். இரண்டாம் சுற்றில் இருந்த டாப் கல்லூரிகளின் இடங்கள் மூன்றாம் சுற்றில் இருக்காது. இது உங்களுக்கு பின்னடைவுதான். அப்வேர்ட் கொடுத்திருந்தால் கூட உங்களுக்கு ஒரு இடம் உறுதியாகியிருக்கும். ஆனால் இனி நீங்கள் அடுத்த ரவுண்டுக்கு வரும் இடங்களில் இருந்து ஒன்றை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளீர்கள்.
எனவே 3 சுற்றுக்குச் செல்லும் மாணவர்கள் இந்த தவறுகளை செய்யாமல் சரியாக சாய்ஸ் ஃபில்லிங் செய்து நல்ல கல்லூரிகளை தேர்வு செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“