பொறியியல் கலந்தாய்வு விரைவில் தொடங்க உள்ள நிலையில், கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்ந்த படிப்புகளை படிக்க சிறந்த கல்லூரிகள் எவை என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வருகின்ற மே 6 ஆம் தேதி வெளியாகிறது. அதனைத் தொடர்ந்து இன்ஜினியரிங் படிப்புகளுக்கான கவுன்சலிங் தொடங்கும். பொறியியல் படிப்புகளில் சமீபகாலமாக கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்ந்த படிப்புகளுக்கு அதிக மவுசு இருந்து வருகிறது.
பெரும்பாலான மாணவர்கள் கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்ந்த ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ், டேட்டா சயின்ஸ், பிசினஸ் சிஸ்டம், சைபர் செக்யூரிட்டி போன்ற படிப்புகளை படிக்க விரும்புகின்றனர். இந்தநிலையில், கம்ப்யூட்டர் சார்ந்த படிப்புகளை படிக்க சிறந்த கல்லூரிகள் எவை என்பதை கல்வி ஆலோசகர் சுரேஷ் சீதாராமன் யூடியூப் வீடியோவில் வெளியிட்டுள்ளார்.
அதன்படி, 170 முதல் 195 கட் ஆஃப் உள்ள மாணவர்களுக்கான கல்லூரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
1). தியாகராஜர் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், மதுரை
2). செயிண்ட் ஜோசப் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், சென்னை
3). ஆர்.எம்.கே இன்ஜினியரிங் காலேஜ், சென்னை
4). ஸ்ரீராமகிருஷ்ணா இன்ஜினியரிங் காலேஜ், கோயம்புத்தூர்
5). மெப்கோ ஸ்லங் இன்ஜினியரிங் காலேஜ், சிவகாசி
6). ஸ்ரீ கிருஷ்ணா காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, கோயம்புத்தூர்
7). கொங்கு இன்ஜினியரிங் காலேஜ், ஈரோடு
8). கற்பகம் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், கோயம்புத்தூர்
9). லயோலா ஐகேம் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, சென்னை
10). நேஷ்னல் இன்ஜினியரிங் காலேஜ், கோவில்பட்டி
11). பனிமலர் இன்ஜினியரிங் காலேஜ், சென்னை
12). சோனா காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, சேலம்
13). டாக்டர் மகாலிங்கம் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கோயம்புத்தூர்
14). எஸ்.ஆர்.எம் ஈஸ்வரி இன்ஜினியரிங் காலேஜ், சென்னை
15). கே.பி.ஆர் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கோயம்புத்தூர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“