தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு விரைவில் தொடங்க உள்ள நிலையில், மெட்ராஸ் தொழில்நுட்ப கல்லூரியில் இந்த ஆண்டு கட் ஆஃப் எப்படி இருக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வருகின்ற மே 6 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சலிங் தொடங்கும்.
இந்தநிலையில் தமிழகத்தின் முன்னணி பொறியியல் கல்லூரியாக திகழும் அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரியான எம்.ஐ.டி கேம்பஸ் எனப்படும், குரோம்பேட்டையில் உள்ள மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் இந்த ஆண்டு கட் ஆஃப் எப்படி இருக்கும் என்பதை இப்போது பார்ப்போம். கட் ஆஃப் உள்ளிட்ட தகவல்களை கல்வி ஆலோசகர் தினேஷ் பிரபு யூடியூப் வீடியோவில் வழங்கியுள்ளார்.
அதன்படி, எம்.ஐ.டி கல்லூரி என்.ஐ.ஆர்.எஃப் ரேங்கிங்கில் 13 ஆவது இடத்தில் உள்ளது. இந்தக் கல்லூரியில் வேலைவாய்ப்பு சிறப்பாக உள்ளது.
பாடப்பிரிவுகளும் கடந்த ஆண்டு கட் ஆஃப் நிலவரமும்
ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் – 195
ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் அண்ட் டேட்டா சயின்ஸ் – 198
ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் – 190
கம்ப்யூட்டர் சயின்ஸ் (எஸ்.எஸ்) – 198.5
கம்ப்யூட்டர் சயின்ஸ் – 199
இ.சி.இ – 198.5
இ.ஐ.இ – 195.5
இ.சி.இ (எஸ்.எஸ்) – 197
ஐ.டி (எஸ்.எஸ்) – 197.5
புரொடொக்சன் இன்ஜினியரிங் – 185.5
ரோபாட்டிக்ஸ் (எஸ்.எஸ்) – 195.5
ரப்பர் அண்ட் பிளாஸ்டிக்ஸ் – 177.5
இடஒதுக்கீட்டு பிரிவுகளுக்கு பொதுப் பிரிவை விட, பிரிவுக்கு ஏற்ப 4 முதல் 10 வரை கட் ஆஃப் குறைவாக இருந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“