தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கவுன்சலிங் செயல்முறை விரைவில் தொடங்க உள்ள நிலையில், உங்கள் கட் ஆஃப் மதிப்பெண்ணுக்கு எந்த பொறியியல் கல்லூரியில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
தமிழகத்தில் பொறியியல் கவுன்சிலிங்கிற்கான விண்ணப்பப் பதிவு முடிந்து ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பித்த சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை ஜூலை 10 ஆம் தேதி வெளியிட தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை திட்டமிட்டுள்ளது.
இந்தநிலையில், கல்வி ஆலோசகர் தினேஷ் பிரபு எந்த கட் ஆஃப் மதிப்பெண்ணுக்கு எந்த கல்லூரி கிடைக்க வாய்ப்புள்ளது என்பதை தனது யூடியூப் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
வீடியோவின்படி, 190 மதிப்பெண்களுக்கு மேல் உள்ள மாணவர்களுக்கு டாப் 20 பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. 120க்கு மேல் கட் ஆஃப் உள்ளவர்களுக்கு ஒவ்வொரு மண்டலத்தில் உள்ள டாப் 30 கல்லூரிகளிலே இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.
அடுத்து மாணவர்கள் அரசு கல்லூரிகளில் சேர விரும்பினால், அதற்கேற்ற கட்டணங்களை இப்போது தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். அதேபோல் தனியார் கல்லூரிகளில் சேர விரும்பினால், குறிப்பிட்ட கல்லூரிகளின் கட்டண விபரங்களை தெரிந்துக் கொண்டு அதற்கேற்ப தயார் செய்துக் கொள்ளுங்கள். ஏனெனில் கவுன்சலிங் தொடங்கி, சீட் ஒதுக்கப்பட்டால், 5 நாட்களுக்குள் நீங்கள் கட்டணங்களை செலுத்த வேண்டி வரும். இல்லை என்றால், நீங்கள் சீட்டை இழக்க நேரிடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“