TNEA Counselling: பொறியியல் கவுன்சலிங்கில் எவ்வளவு இடங்கள் அதிகரிப்பு? கல்லூரி வாரியான விபரம் இங்கே
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2024: கல்லூரிகளில் அதிகரித்துள்ள இடங்களின் விபரம் வெளியீடு; டாப் கல்லூரிகளில், டாப் கோர்ஸ்களில் இடங்கள் அதிகரிப்பு; முழு விபரம் இங்கே
தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சலிங் தொடங்கியுள்ளது. இதனையடுத்து கல்லூரிகளின் இருக்கை விபரங்கள் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தநிலையில், எந்தெந்த கல்லூரிகளில் எவ்வளவு இடங்கள் அதிகமாகியுள்ளன? என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்ற பொறியியல் கல்லூரிகளுக்கான கலந்தாய்வு தொடங்கியுள்ளது. முதலில் சிறப்பு பிரிவினர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து பொதுப் பிரிவு கலந்தாய்வு தொடங்கும்.
இந்தநிலையில், தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை கல்லூரிகளின் இருக்கை விபரங்களை https://www.tneaonline.org/ என்ற இணையதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இந்தநிலையில், கல்வி ஆலோசகர் அஸ்வின் எந்ததெந்த கல்லூரிகளில் எத்தனை இடங்கள் அதிகமாகியுள்ளன? என்பதை தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார்.
அதன்படி, அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரியில், 27 இடங்கள் அதிகரித்து மொத்தம் 987 இடங்கள் உள்ளன. அதேநேரம் எம்.ஐ.டி கேம்பஸ், எஸ்.எஸ்.என், ஸ்கூல் ஆஃப் ஆர்க்கிடெக்சர் அண்ட் ப்ளானிங், பி.எஸ்.ஜி, காரைக்குடி சிக்ரி உள்ளிட்ட கல்லூரிகளில் இடங்கள் அதிகரிக்கப்படவில்லை. சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் அதிகபட்சமாக 476 இடங்கள் அதிகரித்து, மொத்தம் 1074 இடங்கள் உள்ளன.
பி.எஸ்.ஜி ஹைடெக் கல்லூரியில் 70 இடங்கள் அதிகரித்து, மொத்தம் 353 இடங்கள் உள்ளன. கோவை சி.ஐ.டி கல்லூரியில் இடங்கள் அதிகரிக்கப்படவில்லை. தியாகராஜர் கல்லூரியில் 57 இடங்கள் அதிகரித்து, மொத்தம் 774 இடங்கள் உள்ளன.
ஸ்ரீ கிருஷ்ணா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜியில் 124 இடங்கள் அதிகரித்து, மொத்தம் 1067 இடங்கள் உள்ளன. குமரகுரு கல்லூரியில் 34 இடங்கள் அதிகரிக்கப்பட்டு, மொத்தம் 919 இடங்கள் உள்ளன. ஸ்ரீ ஈஸ்வர் கல்லூரியில் 159 இடங்கள் அதிகரிக்கப்பட்டு மொத்தம் 654 இடங்கள் உள்ளன. ஆர்.எம்.கே மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஏ.சி.டெக் கேம்பஸில் இடங்கள் அதிகரிக்கப்படவில்லை.
கல்லூரி வாரியான அதிகரிப்பைத் தெரிந்துக் கொள்ள கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“