தமிழ்நாடு பொறியியல் கவுன்சலிங் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு கட் ஆஃப் எப்படி இருக்கும் என்பது குறித்து இப்போது பார்ப்போம்.
Advertisment
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தொடர்ந்து கவுன்சலிங் அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 1,99,868 பேர் தரவரிசை பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 11% அதிகமாகும்.
இந்தநிலையில், பொறியியல் படிப்புகளுக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் எப்படி இருக்கும் என்பதை கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி தனது யூடியூப் சேனலில் விளக்கியுள்ளார்.
பொதுப் பிரிவு கவுன்சலிங்கில், 195-200 வரை கட் ஆஃப் குறையும். கடந்த ஆண்டை விட இந்த ரேஞ்சில் குறைவானவர்கள் உள்ளதால் கட் ஆஃப் குறையும். கிட்டத்தட்ட ஒரு மதிப்பெண் வரை கட் ஆஃப் குறைய வாய்ப்புள்ளது. எனவே டாப் கல்லூரிகளில் கட் ஆஃப் குறைய வாய்ப்புள்ளது. 190-195 வரை கட் ஆஃப் கடந்த ஆண்டை ஒட்டியே இருக்கும். 185 முதல் 190 வரை ஒரு கட் ஆஃப் அதிகரிக்கும். இந்த ரேஞ்சில் கடந்த ஆண்டை விட மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால், கட் ஆஃப் நிச்சயம் அதிகரிக்கும். 175 முதல் 185 வரை 2-5 கட் ஆஃப் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
170 – 175 வரை 6 கட் ஆஃப் அதிகரிக்கும். 160-170 வரை 7 கட் ஆஃப் அதிகரிக்கும். 150 முதல் 160 வரை 8 கட் ஆஃப் அதிகரிக்கும். 120-150 வரை 10 மதிப்பெண் வரை கட் ஆஃப் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே 2 மற்றும் 3 ஆம் சுற்று கவுன்சலிங்கில் கலந்துக் கொள்ளும் மாணவர்கள் அதிக சாய்ஸ்கள் கொடுக்க வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“