தமிழ்நாடு பொறியியல் கவுன்சலிங் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் டாப் கல்லூரிகளில் பொறியியல் இடங்கள் அதிகரித்துள்ளதால், இந்த ஆண்டு கட் ஆஃப் எப்படி இருக்கும் என்பது குறித்து இப்போது பார்ப்போம்.
Advertisment
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 1,99,868 பேர் தரவரிசை பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 11% அதிகமாகும். தொடர்ந்து கவுன்சலிங் அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. ஜூலை 22 ஆம் தேதி முதல் பொதுப்பிரிவு கவுன்சலிங் தொடங்குகிறது.
இந்தநிலையில், பொறியியல் படிப்புகளுக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் எப்படி இருக்கும் என்பதை கல்வி ஆலோசகர் சுரேஷ் சீதாராமன் தனது யூடியூப் சேனலில் விளக்கியுள்ளார்.
இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் 12000 இடங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்ந்த படிப்புகளில் இடங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. டாப் கல்லூரிகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்ந்த இடங்கள் அதிகரிக்க உள்ளன. எனவே கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்ந்த படிப்புகளை படிக்க விரும்புவர்கள் நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.
பொறியியல் கட் ஆஃப் மதிப்பெண்களைப் பொறுத்தவரை, நிச்சயம் அதிகரிக்கும். இருப்பினும் கட் ஆஃப் 0.5 முதல் 8 வரை தான் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மாணவர்கள் கல்லூரிகளை தேர்வு செய்யும் போது, வேலை வாய்ப்புகள் அதாவது கேம்பஸ் இண்டர்வியூ, கல்லூரியில் வழங்கப்படும் திறன்கள், உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை கவனிக்க வேண்டும். உற்பத்தி துறையின் தாக்கங்கள் பொறியியல் வேலைவாய்ப்புகளில் உள்ளது. மேலும் இண்டர்ன்ஷிப் பெயரில் வேலை வாய்ப்பு வழங்கப்படுவது நடக்கிறது. எனவே கல்லூரியைத் தேர்வு செய்யும்போது கவனமாக செயல்பட வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“