TNEA 2024: இன்ஜினியரிங் கட் ஆஃப் கணிசமாக அதிகரிக்கும்; நிபுணர் விளக்கம்
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2024; கணிசமாக உயர்ந்த கட் ஆஃப் மதிப்பெண்; எந்த ரேஞ்ச்க்கு கட் ஆஃப் அதிகரிக்கும், எந்த ரேஞ்ச்க்கு கட் ஆஃப் குறையும்? நிபுணர் விளக்கம்
தமிழ்நாடு பொறியியல் கவுன்சலிங் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு கட் ஆஃப் எப்படி இருக்கும் என்பது குறித்து இப்போது பார்ப்போம்.
Advertisment
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தொடர்ந்து கவுன்சலிங் அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 1,99,868 பேர் தரவரிசை பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 11% அதிகமாகும்.
இந்தநிலையில், பொறியியல் படிப்புகளுக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் எப்படி இருக்கும் என்பதை கல்வி ஆலோசகர் சுரேஷ் சீதாராமன் தனது யூடியூப் சேனலில் விளக்கியுள்ளார்.
இந்த ஆண்டு 8000 முதல் 12000 இடங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்ந்த படிப்புகளில் இடங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
7.5% இடஒதுக்கீட்டு பிரிவினரில், 195-200 வரை கட் ஆஃப் குறையும். ஆனால் 140 முதல் 190 வரை கட் ஆஃப் அதிகரிக்கும். 110 முதல் 140 வரை கட் ஆஃப் சற்று குறையும். 77.5 முதல் 110 வரை கட் ஆஃப் அதிகரிக்கும்.
பொதுப் பிரிவு கவுன்சலிங்கில், 195-200 வரை கட் ஆஃப் குறையும். 180 முதல் 195 வரை கட் ஆஃப் அதிகரிக்கும். இந்த ரேஞ்சில் கட் ஆஃப் சிறிதளவு அதிகரிக்கும். 140 முதல் 180 வரை கட் ஆஃப் கணிசமாக அதிகரிக்கும். அடுத்து 115 முதல் 140 வரை கட் ஆஃப் சற்று குறையும். 77.5 முதல் 114.5 வரை கட் ஆஃப் கணிசமாக அதிகரிக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“