தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்க உள்ளதால், பொறியியல் கவுன்சலிங்கிற்கான கட் ஆஃப் குறையும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
Advertisment
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான பொது கவுன்சலிங் ஜூலை 22 ஆம் தேதி தொடங்குகிறது. முன்னதாக பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 10 ஆம் தேதி வெளியிடப்பட்டது. மொத்தம் 1,99,868 பேர் தரவரிசை பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 11% அதிகமாகும்.
இந்தநிலையில், பொறியியல் படிப்புகளுக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் எப்படி இருக்கும் என்பதை கல்வி ஆலோசகர் அஸ்வின் தனது யூடியூப் சேனலில் விளக்கியுள்ளார்.
அதன்படி, ஏ.ஐ.சி.டி.இ அனுமதி வழங்கியுள்ளதால், இந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள பல கல்லூரிகள் தங்கள் பொறியியல் படிப்புகளுக்கான இடங்களை உயர்த்த உள்ளன. கிட்டத்தட்ட 18000 முதல் 20000 வரை பொறியியல் இடங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் கட் ஆஃப் மதிப்பெண்களில் கணிசமான தாக்கம் ஏற்பட போகிறது.
கட் ஆஃப் நிலவரத்தைப் பொறுத்தவரை, 198 முதல் 200 வரை கட் ஆஃப் மதிப்பெண்களில் மாற்றம் இருக்காது. 192 முதல் 197.50 வரை 0.50 கட் ஆப் குறைய வாய்ப்புள்ளது. 190.50 முதல் 191.50 வரை கட் ஆஃப் மதிப்பெண்ணில் மாற்றம் இருக்காது. 188 முதல் 190 வரை 0.50 கட் ஆஃப் அதிகரிக்கும். 185 முதல் 187.50 வரை 1 கட் ஆஃப் அதிகரிக்கும். 183.50 முதல் 184.50 வரை 1.50 கட் ஆஃப் அதிகரிக்கும். 182 முதல் 183 வரை 2 கட் ஆஃப் அதிகரிக்கும். 178.50 முதல் 181.50 வரை 2.50 கட் ஆஃப் அதிகரிக்கும். 176 முதல் 178 வரை 3 கட் ஆஃப் அதிகரிக்கும். 173.50 முதல் 175.50 வரை 3.50 கட் ஆஃப் அதிகரிக்கும்.
170.50 முதல் 173 வரை 4 கட் ஆஃப் அதிகரிக்கும். 166.50 முதல் 170 வரை 4.50 கட் ஆஃப் அதிகரிக்கும். 145 முதல் 166 வரை 5 கட் ஆஃப் அதிகரிக்கும். 140 முதல் 144.50 வரை 5.50 கட் ஆஃப் அதிகரிக்கும். 125.50 முதல் 139.50 வரை 6 கட் ஆஃப் அதிகரிக்கும். இதற்கு கீழே கட் ஆஃப் இன்னும் அதிகரிக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“