பொறியியல் கலந்தாய்வு நடைபெற்று வரும் நிலையில், 2 ஆம் சுற்றில் கலந்துக் கொள்ளும் மாணவர்கள் செய்யக் கூடாத தவறுகள் என்னென்ன என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. முதல் சுற்று முடிவடைந்து 2 சுற்று கலந்தாய்வு தொடங்க உள்ளது.
இந்தநிலையில், முதல் சுற்று மாணவர்கள் கவுன்சலிங்கில் செய்த தவறுகள் என்னென்ன என்பதை கல்வி ஆலோசகர் தினேஷ் பிரபு தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார்.
அதன்படி, கல்லூரியில் கட்டணம் எவ்வளவு எனத் தெரியாமல் கல்லூரிகளை தேர்வு செய்ய வேண்டாம். அரசு கல்லூரிகளில் கட்டணம் குறைவாக இருக்கும். ஆனால் தனியார் கல்லூரிகளில் கட்டணம் அதிகம், அதிலும் சில கல்லூரிகள் விடுதி வசதி, போக்குவரத்து வசதி உள்ளிட்ட வசதிகளால் கட்டணம் அதிகமாக இருக்கும். இது ஒவ்வொரு கல்லூரிக்கும் மாறுபடும். எனவே கட்டணங்களைத் தெரிந்துக் கொண்டு கல்லூரிகளை தேர்வு செய்யுங்கள்.
தவறான சாய்ஸ் பில்லிங் செய்ய வேண்டாம். இது உங்கள் எதிர்காலத்தை பாதிக்கலாம். அனைத்து சாய்ஸ்களையும் உங்களுக்கு பிடித்த வரிசையில் அடுக்குங்கள்.
உங்களுடைய கட் ஆஃப் மதிப்பெண்ணுக்கு எந்த கல்லூரிகள் கிடைக்க வாய்ப்பு இருக்கோ, அவற்றை சாய்ஸ் ஃபில்லிங்கில் நிரப்புங்கள். வெறுமனே டாப் கல்லூரிகளை மட்டும் தேர்வு செய்து விட்டு, உங்கள் கட் ஆஃப் குறைவாக இருந்தால், உங்களுக்கு சீட் கிடைக்காமல் போகலாம். முடிந்தவரை அதிகமான சாய்ஸ்களை தேர்வு செய்யுங்கள்.
சீட் ஒதுக்கீடு செய்யப்பட்ட 2 நாட்களுக்குள் அக்செப்ட் அண்ட் ஜாயின் கொடுக்க வேண்டும். இல்லை என்றால் அடுத்த ரவுண்டுக்கு சென்று விடுவீர்கள். எனவே கவனமாக செயல்படுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“