தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியுள்ள நிலையில், முதல் சுற்று கவுன்சலிங்கிற்கான சூப்பர் சாய்ஸ் லிஸ்ட் எது என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 433 பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கான தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2024 கவுன்சலிங் தொடங்கியுள்ளது. சிறப்பு பிரிவு முடிவடைந்து பொதுப் பிரிவினருக்கான கவுன்சலிங் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், முதல் ரவுண்ட் கவுன்சலிங்கிற்கு சிறந்த சாய்ஸ் லிஸ்ட் எது என்பதை கல்வி ஆலோசகர் அஸ்வின் தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார்.
அதன்படி, கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்ந்த படிப்புகளை படிக்க விரும்புபவர்கள் முதலில் டாப் கல்லூரிகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் அண்ட் டேட்டா சயின்ஸ், ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் அண்ட் மெசின் லேர்னிங் உள்ளிட்ட படிப்புகளை தேர்வு செய்யலாம். முதலில், அண்ணா பல்கலைக்கழகத்தின் சி.இ.ஜி கேம்பஸ், எம்.ஐ.டி கேம்பஸ், பி.எஸ்.ஜி, எஸ்.எஸ்.என், சி.ஐ.டி, ஜி.சி.டி, தியாகராஜர், சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி போன்ற முதன்மை கல்வி நிறுவனங்களில் இந்த படிப்புகளை தேர்வு செய்துவிட்டு, பின்னர் பிற கல்லூரிகளில் முயற்சிக்கலாம்.
நல்ல கல்லூரிகளில் படிக்க விரும்புபவர்கள், டாப் கல்லூரிகள் உள்ள கோர் இன்ஜினியரிங் படிப்புகளை தேர்வு செய்யலாம். கல்லூரிகளை தேர்வு செய்யும்போது ஒரு கல்லூரியில் கேம்பஸ் ப்ளேஸ்மெண்ட் எப்படி இருக்கிறது என்பதை தெரிந்துக் கொண்டு தேர்வு செய்யுங்கள். மேலும் நல்ல கல்லூரிகளில் சர்க்யூட் பிராஞ்ச்களை தேர்வு செய்யுங்கள். மெக்கானிக்கல், சிவில் போன்ற படிப்புகளை படிக்க விரும்புபவர்கள் டாப்மோஸ்ட் கல்லூரிகளை தேர்வு செய்யுங்கள். அங்கே உங்களுக்கு இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“