பொறியியல் கவுன்சலிங்கின் இரண்டாம் சுற்று தொடங்கியுள்ள நிலையில், முதல் சுற்றில் மாணவர்களால் அதிகம் விரும்பப்பட்ட கல்லூரிகள் எவை? இரண்டாம் சுற்று மாணவர்கள் எப்படி சாய்ஸ் ஃபில்லிங் செய்யலாம் என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 440க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. முதல் சுற்று கலந்தாய்வு முடிவடைந்து மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து இரண்டாவது சுற்றுக்கான சாய்ஸ் ஃபில்லிங் சனிக்கிழமை தொடங்கியது. 178.9 முதல் 142 வரையிலான கட்-ஆஃப் மதிப்பெண்கள் பெற்ற 85,295 மாணவர்கள் சாய்ஸ் ஃபில்லிங் செய்து வருகின்றனர்.
இந்தநிலையில், முதல் சுற்றுக்கு தகுதி பெற்ற 26,254 மாணவர்களில் 17,679 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 8,575 பேர் முதல் சுற்றிலிருந்து வெளியேறியுள்ளனர். 443 கல்லூரிகளில், 30 கல்லூரிகளில் மட்டுமே 40% இடங்களுக்கு மேல் நிரம்பியுள்ளன, 177 கல்லூரிகளில் ஒரு இடம் கூட முதல் சுற்றில் நிரம்பவில்லை.
இந்த நிலையில், முதல் சுற்றில் மாணவர்களால் அதிகம் விரும்பப்பட்ட கல்லூரிகள் எவை? இரண்டாம் சுற்று மாணவர்கள் எப்படி சாய்ஸ் ஃபில்லிங் செய்யலாம் என்பதை கல்வி ஆலோசகர் அஸ்வின் தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார்.
Advertisment
Advertisements
கல்லூரிகளில் இடங்கள் நிரம்பிய சதவீதத்தின் அடிப்படையில் டாப் கல்லூரிகள் இவை தான்.