பொறியியல் கவுன்சலிங்கின் 3 ஆம் சுற்று தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ள நிலையில், யார் எல்லாம் அப்வேர்ட் கொடுக்கலாம் என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான இணையவழி கலந்தாய்வு நடந்து வருகிறது. 3 ஆவது சுற்று கலந்தாய்வு கடந்த 23 ஆம் தேதி தொடங்கியது. இதில் பங்கேற்க பொதுப் பிரிவின் கீழ் 93,059 பேர் தகுதி பெற்றனர்.
இந்நிலையில், நிர்ணயிக்கப்பட்ட கெடுவுக்குள் விருப்பமான கல்லூரி மற்றும் பாடப் பிரிவை தேர்வு செய்தவர்களில் பொதுப் பிரிவில் 58,889 பேர், 7.5 சதவீத ஒதுக்கீடு பிரிவில் 4,954 பேர் என மொத்தம் 63,843 பேருக்கு ஆகஸ்ட் 26 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
இதை உறுதிசெய்ய அவர்களுக்கு இன்று மாலை 5.30 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. தற்காலிக ஒதுக்கீட்டை உறுதிசெய்யும் மாணவர்களுக்கு 28 ஆம் தேதி (நாளை) காலை 10.30 மணிக்குள் கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும் என தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், பொறியியல் கவுன்சலிங்கின் 3 ஆவது சுற்றில் ஒதுக்கீடு பெற்றவர்களில் யார் எல்லாம் அப்வேர்ட் கொடுக்கலாம், யார் எல்லாம் கொடுக்கக் கூடாது என கல்வி ஆலோசகர் சுரேஷ் சீதாராமன் தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார்.
3 ஆம் சுற்றில் சீட் ஒதுக்கீடு பெற்ற அனைவரும் அப்வேர்ட் (அதாவது அதற்கு கொடுக்கப்பட்டுள்ள சாய்ஸில் இடம் காலியாக இருந்தால், அந்த இடம் கிடைக்க வாய்ப்புள்ளது) கொடுக்கலாம். நிறைய கல்லூரிகளில் மாணவர்கள் ஏற்கனவே சீட் வாங்கியிருப்பார்கள். எனவே அப்வேர்ட் கொடுத்தால், உங்களுக்கு தற்போது கிடைத்துள்ளதை விட, நீங்கள் சாய்ஸில் முதலில் வைத்த இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.
அதேநேரம் இரண்டு விஷயம் முக்கியம். உங்களுக்கு கிடைத்த இடம் பிடித்திருந்தால் அக்செப்ட் செய்து ஏற்றுக் கொள்ளுங்கள். அதனை விட முன்னர் உள்ள சாய்ஸ் வேண்டும் என்றால் அக்செப்ட் அண்ட் அப்வேர்ட் கொடுங்கள். அதைத் தவிர வேறு எந்த ஆப்சனையும் தேர்வு செய்ய வேண்டாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“