தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், சாதி வாரி தரவரிசை என்பது? அதன் பயன் என்ன? என்பது குறித்து இப்போது பார்ப்போம்.
Advertisment
தமிழகத்தில் பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கவுன்சலிங் ஜூலை 22 ஆம் தேதி தொடங்குகிறது. முன்னதாக ஜூலை 10 ஆம் தேதி பொறியியல் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. மொத்தம் 1,99,868 பேர் தரவரிசை பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 11% அதிகமாகும்.
பொறியியல் தரவரிசைப் பட்டியலில் பொது தரவரிசை அதாவது ஜெனரல் ரேங்க் மற்றும் சாதி வாரி தரவரிசை அதாவது கம்யூனிட்டி ரேங்க் என 2 தரவரிசைகள் இடம்பெற்றிருக்கும்.
இந்தநிலையில், கம்யூனிட்டி ரேங்க் என்பது என்ன? அதனால் என்ன நன்மை நடக்கும் என கல்வி ஆலோசகர் அஸ்வின் தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார்.
Advertisment
Advertisements
அதன்படி, இடஒதுக்கீடு அடிப்படையில் இடங்களைப் பெறுவதற்காகவே கம்யூனிட்டி ரேங்க் தனியாக கொடுக்கப்பட்டுள்ளது. ஓ.சி எனப்படும் பொதுப் பிரிவு என்பது முன்னேறிய வகுப்பினருக்கு மட்டும் அல்ல. இடஒதுக்கீட்டு பிரிவினரும் அந்த இடங்களை எடுக்கலாம்.
ஒரு மாணவருக்கு இடங்கள் ஒதுக்கப்படும்போது, முதலில் பொதுப் பிரிவில் இடங்கள் இருந்தால், அந்த இடம் ஒதுக்கப்படும். பொதுப் பிரிவு முடிவடைந்துவிட்டால், இடஒதுக்கீட்டு இடங்களில் இருந்து சீட் வழங்கப்படும். இதன்படி, இடஒதுக்கீட்டு பிரிவினர், பொதுப் பிரிவு மற்றும் இடஒதுக்கீடு என இரண்டு பிரிவிலும் இடங்களை தேர்வு செய்யலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“