தமிழ்நாடு பொறியியல் கவுன்சலிங் செயல்முறை விரைவில் தொடங்க உள்ள நிலையில், இந்த ஆண்டு கட் ஆஃப் மதிப்பெண்கள் கூடுமா? குறையுமா? என்பது குறித்து இப்போது பார்ப்போம்.
Advertisment
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 6 ஆம் தேதி வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சலிங் செயல்முறை தொடங்கும்.
இந்தநிலையில், பொறியியல் படிப்புகளுக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் கணிசமாக குறையும் என கல்வி ஆலோசகர் தினேஷ் பிரபு தனது யூடியூப் சேனலில் விளக்கியுள்ளார். பொறியியல் கட் ஆஃப் மதிப்பெண்களை கணிக்க, 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் தேவை. இருப்பினும் கடந்த ஆண்டு குறிபிட்ட கல்லூரிக்கான கட் ஆஃப் அடிப்படையில் இந்த ஆண்டுக்கான கட் ஆஃப் நிலவரத்தை கணிக்கலாம்.
இந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் இரண்டும், கல்லூரிகளை விருப்பத்திற்கு ஏற்ப இடங்களை அதிகரித்துக் கொள்ள அனுமதித்து உள்ளது. இதனால் பல்வேறு முன்னணி கல்லூரிகள் தங்கள் இடங்களை அதிகரித்துள்ளன. இதனால் கட் ஆஃப் மதிப்பெண்கள் கணிசமாக குறைய வாய்ப்புள்ளது.
கடந்த ஆண்டு பல்வேறு கல்லூரிகள் தங்கள் இடங்களை அதிகரித்ததால், அதற்கு முந்தைய ஆண்டை கட் ஆஃப் கணிசமாக குறைந்தது. இருப்பினும் சில கம்ப்யூட்டர் சார்ந்த படிப்புகளுக்கு கட் ஆஃப் குறையவில்லை. காரணம் மாணவர்கள் இந்த படிப்புகளை படிக்க அதிகம் விரும்புகிறார்கள்.
இந்த ஆண்டு கட் ஆப் மதிப்பெண்களை பொறுத்தவரை, 195க்கு மேல் சற்று குறைய வாய்ப்புள்ளது. 190க்கு மேல் 2 அல்லது 3 கட் ஆஃப் குறையலாம். 180க்கு மேல் 5-7 கட் ஆஃப் குறையலாம். 170க்கு மேல் 5-9 கட் ஆஃப் குறையலாம். 170க்கு மேல் 7-13 கட் ஆஃப் குறையலாம். 150க்கு மேல் 8-15 கட் ஆஃப் குறையலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“