இன்ஜினியரிங் கவுன்சலிங்; 29 கல்லூரிகளில் 100% இடங்கள் நிரம்பின; ஒரு சீட் கூட நிரப்ப முடியாமல் 7 கல்லூரிகள்
Engineering Counselling: தமிழ்நாடு பொறியியல் கவுன்சலிங் பகுப்பாய்வு; 100% இடங்களை நிரப்பிய 29 கல்லூரிகள்; 7 கல்லூரிகள் ஒரு இடம் கூட நிரம்பவில்லை; முழு விபரம் இங்கே
Engineering Counselling: தமிழ்நாடு பொறியியல் கவுன்சலிங் பகுப்பாய்வு; 100% இடங்களை நிரப்பிய 29 கல்லூரிகள்; 7 கல்லூரிகள் ஒரு இடம் கூட நிரம்பவில்லை; முழு விபரம் இங்கே
தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான பொதுக் கலந்தாய்வு நிறைவடைந்துள்ள நிலையில், மாணவர்கள் அதிகம் விரும்பிய கல்லூரிகள், பாடப்பிரிவுகள் எவை என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 440க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. பொதுக் கலந்தாய்வு நிறைவடைந்து, துணைக் கலந்தாய்வுக்கான விண்ணப்பப் பதிவு நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், பொதுக் கலந்தாய்வில் மாணவர்கள் அதிகம் விரும்பிய கல்லூரிகள், பாடப்பிரிவுகள் எவை என்பதை கல்வி ஆலோசகர் அஸ்வின் தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார்.
அதன்படி, 100% இடங்கள் நிரம்பிய கல்லூரிகளாக அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்.ஐ.டி கேம்பஸ், சி.இ.ஜி கேம்பஸ், காரைக்குடி சிக்ரி, எஸ்.எஸ்.என் சென்னை, சி.ஐ.டி கோயம்புத்தூர், பி.எஸ்.ஜி கோயம்புத்தூர், சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, தியாராஜர் பொறியியல் கல்லூரி மதுரை, பி.எஸ்.ஜி டெக் கோயம்புத்தூர், ஜி.சி.டி கோயம்புத்தூர், எஸ்.ஏ.பி கேம்பஸ் சென்னை, ஸ்ரீ கிருஷ்ணா கோயம்புத்தூர், ஸ்ரீ ஈஸ்வர் கோவை, ஏ.சி.டெக் கேம்பஸ் சென்னை, சேலம் அரசுக் கல்லூரி,ஆகியவை உள்ளன. இந்தக் கல்லூரிகளில் ஆவரேஜ் கட் ஆஃப் மதிப்பெண்ணும் 175க்கும் மேல் உள்ளது.
குமரகுரு கோயம்புத்தூர், ராஜலெட்சுமி குழும நிறுவனங்கள் சென்னை, லயோலா ஐகேம் சென்னை, காரைக்குடி அழகப்பா, கே.பி.ஆர் கோவை, வெங்கடேஸ்வரா, கற்பகம், கோவை அண்ணா பல்கலைக்கழக வளாகம், ஸ்ரீ சாய்ராம், சவீதா உள்ளிட்ட கல்லூரிகள் 90%க்கும் மேலாக இடங்களை நிரப்பியுள்ளன.
Advertisment
Advertisements
பாடப்பிரிவுகளைப் பொறுத்தவரை கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவு படிப்புகளில் 55.30% இடங்கள் நிரம்பியுள்ளன. எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் படிப்புகளில் 15.50% இடங்களும், எலக்ட்ரிக்கல் படிப்புகளில் 7.17% இடங்களும் நிரம்பியுள்ளன. மெக்கானிக்கல் சார்ந்த படிப்புகளில் 7.46% இடங்களும், சிவில் சார்ந்த படிப்புகளில் 3.69% இடங்களும் நிரம்பியுள்ளன.
29 கல்லூரிகள் 100% இடங்களையும், 81 கல்லூரிகள் 95%க்கும் அதிகமான இடங்களையும், 109 கல்லூரிகள் 90%க்கும் அதிகமான இடங்களையும், 149 கல்லூரிகள் 80%க்கும் அதிகமான இடங்களையும், 172 கல்லூரிகள் 75%க்கும் அதிகமான இடங்களையும் நிரப்பியுள்ளன.
52 கல்லூரிகள் 10%க்கும் குறைவான இடங்களை நிரப்பியுள்ளன. 12 கல்லூரிகள் 1%க்கும் குறைவான இடங்களை நிரப்பியுள்ளன. அதேநேரம் 7 கல்லூரிகளில் ஒரு இடம் கூட நிரம்பவில்லை.
முழு விபரங்களைத் தெரிந்துக் கொள்ள கீழ்காணும் வீடியோவைக் காணுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“