தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பச் செயல்முறை தொடங்கியுள்ள நிலையில், முதன்மை தனியார் பொறியியல் கல்லூரியான எஸ்.எஸ்.என் கல்லூரியில் கட் ஆஃப் எப்படி இருக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. இது 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்தநிலையில் தமிழகத்தின் டாப் 3ல் உள்ள பொறியியல் கல்லூரியும், முதன்மை தனியார் பொறியியல் கல்லூரியுமான எஸ்.எஸ்.என் எனப்படும் ஸ்ரீ சிவசுப்ரமணிய நாடார் பொறியியல் கல்லூரியின் கட் ஆஃப் எப்படி இருக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.
கல்வி ஆலோசகர் அஸ்வின் தனது யூடியூப் வீடியோவில் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, எஸ்.எஸ்.என் கல்லூரியின் கட் ஆஃப் நிலவரம் இங்கே
பி.சி பிரிவு
பயோமெடிக்கல் – 189
கெமிக்கல் – 185.50
சிவில் – 184
கம்ப்யூட்டர் சயின்ஸ் – 198.50
எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் – 194.50
எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேசன் – 196.50
ஐ.டி - 197
எம்.டெக் கம்ப்யூட்டர் சயின்ஸ் (5 ஆண்டு படிப்பு) – 195
மெக்கானிக்கல் – 190
பொதுப் பிரிவு
பயோமெடிக்கல் – 190.50
கெமிக்கல் – 189.50
சிவில் – 188.50
கம்ப்யூட்டர் சயின்ஸ் – 199
எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் – 196
எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேசன் – 197.50
ஐ.டி - 198
எம்.டெக் கம்ப்யூட்டர் சயின்ஸ் (5 ஆண்டு படிப்பு) – 196
மெக்கானிக்கல் – 192
எஸ்.சி பிரிவு
பயோமெடிக்கல் – 167
கெமிக்கல் – 169
சிவில் – 169
கம்ப்யூட்டர் சயின்ஸ் – 186
எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் – 178
எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேசன் – 181.99
ஐ.டி – 181.50
எம்.டெக் கம்ப்யூட்டர் சயின்ஸ் (5 ஆண்டு படிப்பு) – 180
மெக்கானிக்கல் – 169.50
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“