தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ள நிலையில், பொறியியல் கட் ஆஃப் குறையுமா அல்லது கூடுமா என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 6 ஆம் தேதி வெளியிடப்பட்டதை அடுத்து, பொறியியல் கலந்தாய்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. மாணவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர். இதுவரை 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், இந்த ஆண்டு பொறியியல் கட் ஆஃப் குறைய வாய்ப்புள்ளது என கல்வி ஆலோசகர் விவேக் தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார்.
அதன்படி, பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் பொறியியல் கட் ஆஃப்-க்கு தேவையான இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் சென்டம் குறைந்துள்ளது. அதேநேரம் கணிதத்தில் சென்டம் அதிகரித்துள்ளது. 2023ல் இயற்பியலில் 812 பேர் சென்டம் எடுத்திருந்த நிலையில், இந்த ஆண்டு 633 பேர் சென்டம் எடுத்துள்ளனர். 2023ல் வேதியியலில் 3909 பேர் சென்டம் எடுத்திருந்த நிலையில், இந்த ஆண்டு 471 பேர் சென்டம் எடுத்துள்ளனர். அதேநேரம் 2023ல் கணிதத்தில் 690 பேர் சென்டம் எடுத்திருந்த நிலையில், இந்த ஆண்டு 2587 பேர் சென்டம் எடுத்துள்ளனர்.
200 முதல் 195 வரை 0.5 கட் ஆஃப் குறைய வாய்ப்புள்ளது. 195 – 190 வரை 0.5 கட் ஆஃப் குறைய வாய்ப்புள்ளது. 190 – 170 வரை 1 கட் ஆஃப் குறைய வாய்ப்புள்ளது. 170 – 150 வரை 1.5 கட் ஆஃப் குறைய வாய்ப்புள்ளது. 150 – 120 வரை கடந்த ஆண்டு கட் ஆஃப் அளவில் உள்ளது. 120 – 80 வரை கடந்த ஆண்டு கட் ஆஃப் அளவில் உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“