தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கவுன்சலிங் விரைவில் தொடங்க உள்ள நிலையில், சிறந்த அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரிகள் எவை? அவற்றில் வேலை வாய்ப்பு எப்படி உள்ளது? என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 6 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள் அவசியம் தெரிந்துக் கொள்ள வேண்டிய, தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரிகள் எவை என்பதை இப்போது பார்ப்போம்.
அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரிகள் மற்றும் அவற்றில் வேலை வாய்ப்பு நிலவரம் குறித்து கல்வி ஆலோசகர் விவேக் தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார்.
அதன்படி, அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டணம் மிகக் குறைவு. மேலும் முக்கிய கல்லூரிகளில் நல்ல வேலை வாய்ப்பு நிலையும் உள்ளது.
டாப் அண்ணா பல்கலைக்கழக வளாகக் கல்லூரிகள்
1). கிண்டி பொறியியல் கல்லூரி (சி.இ.ஜி கேம்பஸ்), சென்னை
வேலை வாய்ப்பு சதவீதம் - 98%
பொதுப் பிரிவு, பி.சி, எம்.பி.சி பிரிவினருக்கு எதிர்பார்க்கப்படும் ஆவரேஜ் கட் ஆஃப் – 197
எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு எதிர்பார்க்கப்படும் ஆவரேஜ் கட் ஆஃப் - 180
2). அழகப்பா தொழில்நுட்ப கல்லூரி (ஏ.சி.டி கேம்பஸ்), சென்னை
வேலை வாய்ப்பு சதவீதம் - 98%
பொதுப் பிரிவு, பி.சி, எம்.பி.சி பிரிவினருக்கு எதிர்பார்க்கப்படும் ஆவரேஜ் கட் ஆஃப் – 196
எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு எதிர்பார்க்கப்படும் ஆவரேஜ் கட் ஆஃப் – 181
3). மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரி (எம்.ஐ.டி கேம்பஸ்), குரோம்பேட்டை, சென்னை
வேலை வாய்ப்பு சதவீதம் - 97%
பொதுப் பிரிவு, பி.சி, எம்.பி.சி பிரிவினருக்கு எதிர்பார்க்கப்படும் ஆவரேஜ் கட் ஆஃப் – 195
எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு எதிர்பார்க்கப்படும் ஆவரேஜ் கட் ஆஃப் – 182
4). அண்ணாமலை பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரி, கடலூர்
வேலை வாய்ப்பு சதவீதம் - 62%
பொதுப் பிரிவு, பி.சி, எம்.பி.சி பிரிவினருக்கு எதிர்பார்க்கப்படும் ஆவரேஜ் கட் ஆஃப் – 165
எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு எதிர்பார்க்கப்படும் ஆவரேஜ் கட் ஆஃப் – 140
அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகங்கள்
1). அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகம், கோயம்புத்தூர்.
வேலை வாய்ப்பு சதவீதம் - 65%
பொதுப் பிரிவு, பி.சி, எம்.பி.சி பிரிவினருக்கு எதிர்பார்க்கப்படும் ஆவரேஜ் கட் ஆஃப் – 179
எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு எதிர்பார்க்கப்படும் ஆவரேஜ் கட் ஆஃப் – 160
2). அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகம், திருநெல்வேலி
3). அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகம், மதுரை
பின்வரும் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் கல்வி கட்டணம் குறைவு. ஆனால் வேலைவாய்ப்பு குறைவாகவே உள்ளது.
அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள்
1). பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி, விழுப்புரம்
2). பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி, திண்டிவனம்
3). பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி, ஆரணி
4). பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி, காஞ்சிபுரம்
5). பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி, திருச்சிராப்பள்ளி
6). பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி, அரியலூர்
7). பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி, திருக்குவளை
8). பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி, பண்ருட்டி
9). பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி, பட்டுக்கோட்டை
10). பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி, நாகர்கோயில்
11). பல்கலைக்கழக வி.ஓ.சி பொறியியல் கல்லூரி, தூத்துக்குடி
12). பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி, ராமநாதபுரம்
13). பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி, திண்டுக்கல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.