TNEA 2024: பொறியியல் கவுன்சலிங்: சென்னை மண்டலத்தில் டாப் பொறியியல் கல்லூரிகள் இவைதான்!
TNEA Counselling: பொறியியல் படிக்க விரும்புபவர்களின் கவனத்திற்கு; சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்கள் அடங்கிய சென்னை மண்டலத்தில் உள்ள டாப் இன்ஜினியரிங் கல்லூரிகள் எவை தெரியுமா?
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பச் செயல்முறை முடிவடைந்துள்ளது, மேலும் விரைவில் கவுன்சலிங் தொடங்க உள்ளது. இந்த நிலையில், 11 மாவட்டங்களை உள்ளடக்கிய சென்னை மண்டலத்தில் உள்ள டாப் பொறியியல் கல்லூரிகள் எவை? என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
தமிழகத்தில் பொறியியல் கவுன்சிலிங்கிற்கான விண்ணப்பப் பதிவு நிறைவடைந்துள்ளது. 2 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் பொறியியல் சேர்க்கைக்கு பதிவாகியுள்ளன. இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு பொறியியல் கலந்தாய்வு விரைவில் தொடங்க உள்ளது.
இந்தநிலையில், கல்வி ஆலோசகர் அஸ்வின் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், ராணிபேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளகுறிச்சி, திருப்பத்தூர் ஆகிய 11 மாவட்டங்களை உள்ளடக்கிய சென்னை மண்டலத்தில் உள்ள டாப் கல்லூரிகள் எவை என்பதை தனது யூடியூப் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
1). அண்ணாப் பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரி, சென்னை
Advertisment
Advertisement
2). அண்ணாப் பல்கலைக்கழகத்தின் எம்.ஐ.டி கேம்பஸ், குரோம்பேட்டை, செங்கல்பட்டு
3). எஸ்.எஸ்.என் என அழைக்கப்படும் ஸ்ரீ சிவசுப்பிரமணிய நாடார் பொறியியல் கல்லூரி, காலவாக்கம், செங்கல்பட்டு
4). சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, குன்றத்தூர், சென்னை
5). லயோலா ஐகேம் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, சென்னை
6). ராஜலட்சுமி இன்ஜினியரிங் காலேஜ், காஞ்சிபுரம்
7). ஆர்.எம்.கே இன்ஜினியரிங் காலேஜ், திருவள்ளூர்
8). ஸ்ரீ வெங்கடேஸ்வரா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், காஞ்சிபுரம்
9). அண்ணாப் பல்கலைக்கழகத்தின் ஏ.சி.டி கேம்பஸ், கிண்டி, சென்னை
10). ஆர்.எம்.டி இன்ஜினியரிங் காலேஜ், திருவள்ளூர்
11). ஸ்ரீ சாய்ராம் இன்ஜினியரிங் காலேஜ், சென்னை
12). சவீதா இன்ஜினியரிங் காலேஜ், காஞ்சிபுரம்
13). ஈஸ்வரி இன்ஜினியரிங் காலேஜ், சென்னை
14). ஸ்ரீ சாய்ராம் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, சென்னை
15). ஆர்.எம்.கே காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, திருவள்ளூர்
மாவட்ட வாரியாக டாப் இடங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகளின் விவரங்களைத் தெரிந்துக் கொள்ள கீழே உள்ள வீடியோவைப் பார்க்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“