தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கவுன்சலிங் விரைவில் தொடங்க உள்ள நிலையில், கோவை மண்டலத்தில் உள்ள டாப் பொறியியல் கல்லூரிகள் எவை? என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
தமிழகத்தில் பொறியியல் கவுன்சிலிங்கிற்கான விண்ணப்பச் செயல்முறை முடிவடைந்து, சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனையடுத்து விரைவில் கவுன்சலிங் தொடங்க உள்ளது.
இந்தநிலையில், கல்வி ஆலோசகர் அஸ்வின், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்கள் அடங்கிய கோவை மண்டலத்தில் உள்ள டாப் கல்லூரிகள் எவை என்பதை தனது யூடியூப் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
1). பி.எஸ்.ஜி காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, கோயம்புத்தூர்
2). பி.எஸ்.ஜி இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் அப்ளைடு ரிசர்ச், கோயம்புத்தூர்
3). கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி
4). அரசு தொழில்நுட்பக் கல்லூரி, கோயம்புத்தூர்
5). ஸ்ரீ கிருஷ்ணா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கோயம்புத்தூர்
6). குமரகுரு காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, கோயம்புத்தூர்
7). ஸ்ரீ ஈஸ்வர் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், கோயம்புத்தூர்
8). அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகம், கோயம்புத்தூர்
9). அரசு பொறியியல் கல்லூரி, சேலம்
10). ஸ்ரீ கிருஷ்ணா காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, கோயம்புத்தூர்
11). பண்ணாரி அம்மன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, ஈரோடு
12). கே.பி.ஆர் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கோயம்புத்தூர்
13). கற்பகம் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், கோயம்புத்தூர்
14). அரசு பொறியியல் கல்லூரி, பர்கூர்
15). கொங்கு இன் ஜினியரிங் காலேஜ், ஈரோடு
16). அரசு பொறியியல் கல்லூரி, ஈரோடு
17). ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் காலேஜ், கோயம்புத்தூர்
இதுதவிர மாவட்ட வாரியான டாப் பொறியியல் கல்லூரிகள் எவை என்பதை தெரிந்துக் கொள்ள கீழே உள்ள வீடியோவைப் பார்க்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“