தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பச் செயல்முறை நடைபெற்று வரும் நிலையில், தென் மாவட்டங்களில் உள்ள டாப் பொறியியல் கல்லூரிகள் எவை? என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
தமிழகத்தில் பொறியியல் கவுன்சிலிங்கிற்கான விண்ணப்பச் செயல்முறை தொடங்கி நடைபெற்று வருகிறது. மாணவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர். இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் பதிவாகியுள்ளன.
இந்தநிலையில், கல்வி ஆலோசகர் சுரேஷ் சீதாராமன் மதுரை, சிவகங்கை, விருதுநகர், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் உள்ள டாப் இன்ஜினியரிங் கல்லூரிகள் எவை என்பதை தனது யூடியூப் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
1). தியாராஜர் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், மதுரை
2). அழகப்பா செட்டியார் அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, காரைக்குடி
3). மெப்கோ ஸ்லங் இன்ஜினியரிங், சிவகாசி
4). நேஷ்னல் இன்ஜினியரிங் காலேஜ், தூத்துக்குடி
5). பி.எஸ்.என்.ஏ காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, திண்டுக்கல்
6). பிரான்சிஸ் சேவியர் இன்ஜினியரிங் காலேஜ், திருநெல்வேலி
7). ராம்கோ இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, விருதுநகர்
8). வேலம்மாள் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, மதுரை
9). கே.எல்.என் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், சிவகங்கை
10). காமராஜ் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, விருதுநகர்
11). செயிண்ட் சேவியர் கத்தோலிக் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், கன்னியாகுமரி
12). பொன்ஜெஸ்லி காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், கன்னியாகுமரி
13). சேது இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, விருதுநகர்
14). பி.எஸ்.ஆர் இன்ஜினியரிங் காலேஜ், விருதுநகர்
15). ரோஹினி காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கன்னியாகுமரி
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“