பொறியியல் படிப்புகளுக்கான கவுன்சலிங் விரைவில் தொடங்க உள்ள நிலையில், சாய்ஸ் ஃபில்லிங் செய்வது எப்படி? எதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்? என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வு மூலம் நடைபெறுகிறது. அண்ணா பல்கலைக்கழக துறை கல்லூரிகள், அரசு கல்லூரிகள், அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள் ஆகிய அனைத்து வகை பொறியியல் கல்லூரிகளுக்கும் கலந்தாய்வு மூலமே மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
இந்தக் கல்லூரிகளில் பி.இ, பி.டெக் படிப்பில் அரசு ஒதுக்கீட்டுக்கு ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் நடப்பு கல்வி ஆண்டில் சேர்க்கை பெறுவதற்கான ஆன்லைன் விண்ணப்ப்ப பதிவு மே 7 ஆம் தேதி தொடங்கி ஜூன் 6 ஆம் தேதி முடிவடைந்தது. 2.5 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பொறியியல் படிக்க விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டு தற்போது சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் முடிவு பெற்றுள்ளது. இதனையடுத்து தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். தொடர்ந்து கவுன்சலிங் நடைபெறும்.
இந்த நிலையில் சாய்ஸ் ஃபில்லிங் செய்வது எப்படி? எதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்? என்பதை கல்வி ஆலோசகர் சுரேஷ் சீதாராமன் விளக்கியுள்ளார்.
Advertisment
Advertisements
முதல் சுற்று கலந்தாய்வுக்கு 180 கட் ஆஃப் மதிப்பெண்ணுக்கு மேல் உள்ளவர்களுக்கு அழைப்பு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கவுன்சலிங்கில் முக்கிய விஷயமே சாய்ஸ் ஃபில்லிங் தான். இதில் சொதப்பினால், நல்ல மதிப்பெண் எடுத்தவர்கள் சுமாரான கல்லூரியில் படிக்க நேரிடும். விரும்பிய கோர்ஸை படிக்க முடியாமல் போகலாம்.
அடுத்தது கோர்ஸூக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டுமா? அல்லது கல்லூரிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டுமா? என்ற கேள்வி எழும். டாப் கல்லூரிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கலாம். ஆனால் சில கல்லூரிகளில் சில கோர்ஸ்கள் நன்றாக இருக்கும், சில கோர்ஸ்கள் சுமாராக இருக்கும். இதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
டாப் கல்லூரிகளை பொறுத்தவரை அனைத்து கோர்ஸ்களையும் சாய்ஸில் வைக்கலாம். சில கல்லூரிகளில் குறிப்பிட்ட சில கோர்ஸ்கள் சூப்பராக இருக்கும். அவற்றை படிக்க விரும்பினால், அதற்கு முன்னுரிமை அளிக்கலாம்.
எஸ்.சி, எஸ்.டி ஸ்காலர்ஷிப் தகுதியுள்ள மாணவர்கள் அனைவருக்கும் வழங்கப்படும். எனவே நேரடியாக சேர வேண்டிய அவசியமில்லை, கவுன்சலிங் மூலமாகவே சேரலாம். இதேபோல் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கான ஸ்காலர்ஷிப்பும் வழங்கப்படும். ஸ்காலர்ஷிப் இருக்கு, சீட் இலவசம் என்று கூறும் சுமாரான கல்லூரிகளை நம்பி செல்ல வேண்டாம்.