பொறியியல் அட்மிஷன் 2025: இந்த ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸுக்கு போட்டியாக உருவெடுத்த இந்த குரூப்; மாணவர்களின் சாய்ஸ் எப்படி?
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2025; இரண்டாம் சுற்று கலந்தாய்வில் கல்லூரிகளில் எவ்வளவு இடங்கள் நிரம்பியுள்ளன? கம்ப்யூட்டர் சயின்ஸூக்கு இணையாக மாணவர்களால் விரும்பப்பட்ட கோர்ஸ் எவை என்பது இங்கே
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2025; இரண்டாம் சுற்று கலந்தாய்வில் கல்லூரிகளில் எவ்வளவு இடங்கள் நிரம்பியுள்ளன? கம்ப்யூட்டர் சயின்ஸூக்கு இணையாக மாணவர்களால் விரும்பப்பட்ட கோர்ஸ் எவை என்பது இங்கே
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான மூன்றாம் சுற்று தொடங்கியுள்ள நிலையில், இரண்டாம் சுற்றில் கல்லூரிகளில் நிரம்பியுள்ள இடங்களின் விபரம் மற்றும் சிறந்த பாடப்பிரிவுகள் எவை என்பது குறித்து இப்போது பார்ப்போம்.
Advertisment
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வு மூலம் நடைபெறுகிறது. இந்தக் கல்லூரிகளில் பி.இ, பி.டெக் படிப்பில் அரசு ஒதுக்கீட்டுக்கு சுமார் 1.70 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு 2.39 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்தனர். இதுவரை 2 சுற்று கவுன்சலிங் நிறைவடைந்துள்ளது.
இந்தநிலையில், இரண்டாம் சுற்றில் கல்லூரிகளில் நிரம்பியுள்ள இடங்களின் விபரம் மற்றும் சிறந்த பாடப்பிரிவுகள் எவை என்பது குறித்து கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார்.
இரண்டாம் சுற்றில் சுமார் 98565 மாணவர்கள் கலந்துக் கொண்டனர். 53265 மாணவர்களுக்கு சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் முதல் சுற்றில் சரியாக சாய்ஸ் ஃபில்லிங் செய்யாமல், சீட் கிடைக்காத 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் இரண்டாம் சுற்றில் சீட் எடுத்துள்ளனர்.
Advertisment
Advertisements
மொத்தம் உள்ள 172589 இடங்களில் இதுவரை 79894 இடங்கள் நிரம்பியுள்ளன. மூன்றாம் சுற்றுக்கு 92605 இடங்கள் உள்ளன.
இரண்டாம் சுற்றில் கோர் இன்ஜினியரிங் படிப்புகள் அதிகமாக நிரம்பியுள்ளன. கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்ந்த படிப்புகளுக்கு இணையாக கோர் படிப்புகள் நிரம்பியுள்ளன.
மொத்தமுள்ள 423 கல்லூரிகளில், 22 கல்லூரிகளில் ஒரு இடம் கூட நிரம்பவில்லை. 148 கல்லூரிகளில் 10%க்கும் குறைவான இடங்களே நிரம்பியுள்ளன. அதேநேரம் 56 கல்லூரிகளில் 90%க்கும் அதிகமான இடங்கள் நிரம்பியுள்ளன. 148 கல்லூரிகளில் 50%க்கும் அதிகமான இடங்கள் நிரம்பியுள்ளன. 7 கல்லூரிகளில் 100% இடங்கள் நிரம்பியுள்ளன. 276 கல்லூரிகளில் 50%க்கும் குறைவான இடங்களே நிரம்பியுள்ளன.