TNEA 2025: கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புகளில் டாப் எவை? விளக்கும் நிபுணர்!

இன்ஜினியரிங் படிக்க விரும்புவோர் கவனத்திற்கு; கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்ந்த படிப்புகளில் கடந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நிலவரம் என்ன? எதிர்காலத்தில் வேலை வாய்ப்புகள் எப்படி இருக்கும்? நிபுணர் விளக்கம்

இன்ஜினியரிங் படிக்க விரும்புவோர் கவனத்திற்கு; கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்ந்த படிப்புகளில் கடந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நிலவரம் என்ன? எதிர்காலத்தில் வேலை வாய்ப்புகள் எப்படி இருக்கும்? நிபுணர் விளக்கம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Engineering Students

பொறியியல் படிக்க விரும்புபவர்களின் பெரு விருப்பமாக கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்ந்த படிப்புகள் உள்ளன. எனவே இந்தப் படிப்புகளில் டாப் படிப்பு எது? வேலை வாய்ப்புகள் எப்படி இருக்கும்? என்பது குறித்து இப்போது தெரிந்துக் கொள்வோம்.

Advertisment

தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கை கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக இருந்து வருகிறது. இந்த ஆண்டும் இன்ஜினியரிங் படிக்க ஆர்வம் அதிகமாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இன்ஜினியரிங் படிப்பை பொறுத்தவரை கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்ந்த படிப்புகளுக்கு மவுசு அதிகமாக உள்ளது. கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேசன் டெக்னாலஜி, ஆர்டிஃபிசியல் இண்டலிஜென்ஸ் அண்ட் டேட்டா சயின்ஸ், சைபர் செக்யூரிட்டி உள்ளிட்ட படிப்புகளை படிக்க மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்தநிலையில், கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புகளில் டாப் கோர்ஸ் எது? எதிர்காலத்தில் வேலை வாய்ப்பு எப்படி இருக்கும் என்பதை கல்வி ஆலோசகர் தினேஷ் பிரபு தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்ந்த 14 படிப்புகள் உள்ளன. கடந்த ஆண்டு இந்தப் படிப்புகளில் சுமார் 65,000 மாணவர்கள் சேர்க்கைப் பெற்றுள்ளனர். 

Advertisment
Advertisements

கடந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நிலவரம்

கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் – 26585

ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் அண்ட் டேட்டா சயின்ஸ் – 14739

இன்பர்மேஷன் டெக்னாலஜி – 13,034

சி.எஸ்.இ சைபர் செக்யூரிட்டி – 3181

சி.எஸ்.இ ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் அண்ட் மெசின் லேனிங் – 3152

கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் பிசினஸ் சிஸ்டம் – 1935

ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் அண்ட் மெசின் லேனிங் - 737

கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் டிசைன் - 366

சி.எஸ்.இ இண்டர்நெட் ஆஃப் திங்ஸ் - 277

கம்ப்யூட்டர் அண்ட் கம்யூனிகேசன் இன்ஜினியரிங் - 209

எம்.டெக் சி.எஸ்.இ - 204

சைபர் செக்யூரிட்டி - 183

கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி - 72

ஐ.ஓ.டி அண்ட் சைபர் செக்யூரிட்டி அண்ட் பிளாக் செயின் - 41

இன்னும் சில சுயஉதவி கோர்ஸ்களை சேர்க்கும் போது ஒட்டுமொத்தமாக 65000க்கும் மேற்பட்ட இடங்கள் கடந்த ஆண்டு நிரம்பியுள்ளன. இந்த ஆண்டு இந்த படிப்புகளில் இடங்கள் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேற்கூறிய வரிசையில் உள்ள கோர்ஸ்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தேர்வு செய்யலாம். இந்தப் படிப்புகளுக்கு எதிர்காலத்தில் சிறந்த வேலை வாய்ப்பு உள்ளது.

Engineering Tn Engineering Admissions

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: