தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2025; இரண்டாம் சுற்றில் கலந்துக் கொள்ளும் மாணவர்களுக்கு சேலம், ஈரோடு, கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் டாப் பொறியியல் கல்லூரிகள் எவை?
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2025; இரண்டாம் சுற்றில் கலந்துக் கொள்ளும் மாணவர்களுக்கு சேலம், ஈரோடு, கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் டாப் பொறியியல் கல்லூரிகள் எவை?
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான முதல் சுற்று கவுன்சலிங் முடிவடைந்துள்ள நிலையில், இரண்டாம் சுற்றில் கலந்துக் கொள்ளும் மாணவர்களுக்கு ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள டாப் பொறியியல் கல்லூரிகள் எவை என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வு மூலம் நடைபெறுகிறது. இந்தக் கல்லூரிகளில் பி.இ, பி.டெக் படிப்பில் அரசு ஒதுக்கீட்டுக்கு ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு 2.39 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்தனர்.
இவர்களுக்கு முதல் சுற்று கவுன்சலிங் முடிவடைந்த நிலையில், சுமார் 30000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இரண்டாம் சுற்று கலந்தாய்வு தொடங்க உள்ளது. இரண்டாம் சுற்றில் சுமார் 1 லட்சம் மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். 143 முதல் 178.9 கட் ஆஃப் வரை உள்ளவர்கள் இரண்டாம் சுற்று கலந்தாய்வில் கலந்துக் கொள்வர்.
இந்தநிலையில், இரண்டாம் சுற்றில் கலந்துக் கொள்ளும் மாணவர்களுக்கு சேலம், ஈரோடு, கரூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் டாப் பொறியியல் கல்லூரிகள் எவை என்பதை மண்டல வாரியாக கல்வி ஆலோசகர் சுரேஷ் சீதாராமன் தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார்.
Advertisment
Advertisements
ஈரோடு மாவட்ட டாப் இன்ஜினியரிங் கல்லூரிகள்
1). அரசு பொறியியல் கல்லூரி (ஐ.ஆர்.டி.டி), ஈரோடு
2). பண்ணாரி அம்மன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, ஈரோடு
2). கொங்கு இன்ஜினியரிங் காலேஜ், ஈரோடு
4). ஈரோடு செங்குந்தர் இன்ஜினியரிங் காலேஜ், ஈரோடு
5). வேளாளர் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, ஈரோடு
6). நந்தா இன்ஜினியரிங் காலேஜ், ஈரோடு
7). காங்கேயம் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, திருப்பூர்
சேலம் மாவட்ட டாப் பொறியியல் கல்லூரிகள்
1). அரசு பொறியியல் கல்லூரி, சேலம்
2). சோனா காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, சேலம்
3). நாலேட்ஜ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, சேலம்
4). தி காவேரி இன்ஜினியரிங் காலேஜ், சேலம்
கரூர் மாவட்ட டாப் பொறியியல் கல்லூரிகள்
1). வி.எஸ்.பி இன்ஜினியரிங் காலேஜ், கரூர்
2). எம்.குமாரசாமி காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், கரூர்
3). செட்டிநாடு காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கரூர்
நாமக்கல் மாவட்ட டாப் பொறியியல் கல்லூரிகள்
1). விவேகானந்தா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் ஃபார் வுமன், நாமக்கல்
2). கே.எஸ் ரங்கசாமி காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, திருச்செங்கோடு