/indian-express-tamil/media/media_files/KTRg5XxPMAbr8qw1XQbL.jpg)
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான முதல் சுற்று கவுன்சலிங் முடிவடைந்துள்ள நிலையில், இரண்டாம் சுற்றில் கலந்துக் கொள்ளும் மாணவர்களுக்கு கோவை மண்டலத்தில் டாப் பொறியியல் கல்லூரிகள் எவை என்பதை மண்டல வாரியாக இப்போது பார்ப்போம்.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வு மூலம் நடைபெறுகிறது. இந்தக் கல்லூரிகளில் பி.இ, பி.டெக் படிப்பில் அரசு ஒதுக்கீட்டுக்கு ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு 2.39 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்தனர்.
இவர்களுக்கு முதல் சுற்று கவுன்சலிங் முடிவடைந்த நிலையில், சுமார் 30000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இரண்டாம் சுற்று கலந்தாய்வு தொடங்க உள்ளது. இரண்டாம் சுற்றில் சுமார் 1 லட்சம் மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். 143 முதல் 178.9 கட் ஆஃப் வரை உள்ளவர்கள் இரண்டாம் சுற்று கலந்தாய்வில் கலந்துக் கொள்வர்.
இந்தநிலையில், இரண்டாம் சுற்றில் கலந்துக் கொள்ளும் மாணவர்களுக்கு கோவை மண்டலத்தில் டாப் பொறியியல் கல்லூரிகள் எவை என்பதை மண்டல வாரியாக கல்வி ஆலோசகர் சுரேஷ் சீதாராமன் தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார்.
கோவை மண்டல டாப் இன்ஜினியரிங் கல்லூரிகள்
1). ஸ்ரீ கிருஷ்ணா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கோவை
2). ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் காலேஜ், கோவை
3). பண்ணாரி அம்மன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, ஈரோடு
4). டாக்டர் மகாலிங்கம் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கோவை
5). கற்பகம் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், கோவை
6). ஜே.சி.டி காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கோவை
7). வி.எஸ்.பி காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் டெக்னிக்கல் கேம்பஸ், கோவை
8). ஸ்ரீ சக்தி இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கோவை
9). ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, கோவை
10). அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகம், கோவை
11). டாக்டர் என்.ஜி.பி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, கோவை
12). கலைஞர் கருணாநிதி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, கோவை
13). ரத்தினம் டெக்னிக்கல் கேம்பஸ், கோயம்புத்தூர்
14). எஸ்.என்.எஸ் காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, கோவை
15). ஹிந்துஸ்தான் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கோவை
16). ஆர்.வி.எஸ் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கோவை
17). கே.ஜி.ஐ.எஸ்.எல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, கோவை
18). கற்பகம் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, கோவை
19). நேரு இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கோவை
20). ஜான்சன்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, கோவை
இந்த லிஸ்டில் இடம் பெறாத சி.இ.டி, ஜி.சி.டி, பி.எஸ்.ஜி போன்ற கல்லூரிகளில் பெரும்பாலான இடங்கள் முடிந்துவிட்டன. சில இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு மட்டும் சில கோர்ஸ்கள் இருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.