தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2025; இரண்டாம் சுற்றில் கலந்துக் கொள்ளும் மாணவர்களுக்கு மதுரை, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மண்டலங்களில் டாப் பொறியியல் கல்லூரிகள் எவை?
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2025; இரண்டாம் சுற்றில் கலந்துக் கொள்ளும் மாணவர்களுக்கு மதுரை, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மண்டலங்களில் டாப் பொறியியல் கல்லூரிகள் எவை?
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான முதல் சுற்று கவுன்சலிங் முடிவடைந்துள்ள நிலையில், இரண்டாம் சுற்றில் கலந்துக் கொள்ளும் மாணவர்களுக்கு மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர் மண்டலங்களில் உள்ள டாப் பொறியியல் கல்லூரிகள் எவை என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வு மூலம் நடைபெறுகிறது. இந்தக் கல்லூரிகளில் பி.இ, பி.டெக் படிப்பில் அரசு ஒதுக்கீட்டுக்கு ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு 2.39 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்தனர்.
இவர்களுக்கு முதல் சுற்று கவுன்சலிங் முடிவடைந்த நிலையில், சுமார் 30000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இரண்டாம் சுற்று கலந்தாய்வு தொடங்க உள்ளது. இரண்டாம் சுற்றில் சுமார் 1 லட்சம் மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். 143 முதல் 178.9 கட் ஆஃப் வரை உள்ளவர்கள் இரண்டாம் சுற்று கலந்தாய்வில் கலந்துக் கொள்வர்.
இந்தநிலையில், இரண்டாம் சுற்றில் கலந்துக் கொள்ளும் மாணவர்களுக்கு மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மண்டலங்களில் டாப் பொறியியல் கல்லூரிகள் எவை என்பதை கல்வி ஆலோசகர் சுரேஷ் சீதாராமன் தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார்.
Advertisment
Advertisements
மதுரை மண்டல டாப் இன்ஜினியரிங் கல்லூரிகள்
1). தியாகராஜர் பொறியியல் கல்லூரி, மதுரை
2). அழகப்பா செட்டியார் அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், காரைக்குடி
3). பி.எஸ்.என்.ஏ காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, திண்டுக்கல்
4). வேலம்மாள் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, மதுரை
5). எஸ்.ஆர்.எம் மதுரை காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, மதுரை
6). கே.எல்.என் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், சிவகங்கை
7). ஆர்.வி.எஸ் ஸ்கூல் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, திண்டுக்கல்
8). அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகம், மதுரை
9). என்.பி.ஆர் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, திண்டுக்கல்
10. எஸ்.எஸ்.எம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, திண்டுக்கல்
விருதுநகர் மண்டல டாப் பொறியியல் கல்லூரிகள்
1). மெப்கோ ஸ்லங் இன்ஜினியரிங் காலேஜ், சிவகாசி
2). நேஷ்னல் இன்ஜினியரிங் காலேஜ், தூத்துக்குடி
3). ராம்கோ இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, விருதுநகர்
4). சேது இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, விருதுநகர்
5). காமராஜ் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, விருதுநகர்
6). பி.எஸ்.ஆர் இன்ஜினியரிங் காலேஜ், விருதுநகர்
7). ஏ.ஏ.ஏ காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, விருதுநகர்
கன்னியாகுமரி மண்டல டாப் பொறியியல் கல்லூரிகள்
1). அருணாச்சலா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் ஃபார் வுமன், நாகர்கோவில்
2). செயிண்ட் சேவியர் கத்தோலிக் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், நாகர்கோவில்
3). அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி, கன்னியாகுமரி
4). ரோகிணி காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கன்னியாகுமரி
5). பொன்செஸ்டி காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், நாகர்கோவில்
6). மார் எப்ராம் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கன்னியாகுமரி
திருநெல்வேலி மண்டல டாப் பொறியியல் கல்லூரிகள்
1). அரசு பொறியியல் கல்லூரி, திருநெல்வேலி
2). அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகம், திருநெல்வேலி
3). பிரான்சிஸ் சேவியர் இன்ஜினியரிங் காலேஜ், திருநெல்வேலி
4). பி.எஸ்.என் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, திருநெல்வேலி
5). டாக்டர் சிவந்தி ஆதித்தனார் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், தூத்துக்குடி
6). எஸ்.சி.ஏ.டி காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, திருநெல்வேலி