பொறியியல் கவுன்சலிங்: 7.5% இடஒதுக்கீட்டில் சீட் எவ்வளவு இருக்கு? கட் ஆஃப் எப்படி இருக்கும்?
தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை 2025: அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீட்டில் மொத்தம் எவ்வளவு இடங்கள் இருக்கு? கட் ஆஃப் நிலவரம் என்ன? என்ற முழு விபரம் இங்கே
தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை 2025: அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீட்டில் மொத்தம் எவ்வளவு இடங்கள் இருக்கு? கட் ஆஃப் நிலவரம் என்ன? என்ற முழு விபரம் இங்கே
தமிழகத்தில் இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு விரைவில் தொடங்க உள்ள நிலையில், 7.5% அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டில் எவ்வளவு இடங்கள் கிடைக்கும்? கட் ஆஃப் எப்படி இருக்கும்? என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வு மூலம் நடைபெறுகிறது. இந்தக் கல்லூரிகளில் பி.இ, பி.டெக் படிப்பில் அரசு ஒதுக்கீட்டுக்கு ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் நடப்பு கல்வி ஆண்டில் சேர்க்கை பெறுவதற்கான ஆன்லைன் விண்ணப்ப்ப பதிவு மே 7 ஆம் தேதி தொடங்கி ஜூன் 6 ஆம் தேதி முடிவடைந்தது. 2.39 லட்சம் அதிகமான பொறியியல் படிக்க விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளும் முடிவடைந்துள்ளது. இதனையடுத்து தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, கலந்தாய்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், 7.5% அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டில் எவ்வளவு இடங்கள் கிடைக்கும்? கட் ஆஃப் எப்படி இருக்கும்? என்பது கேரியர் கைடன்ஸ் அசோக் என்ற யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ள வீடியோவில் விளக்கப்பட்டுள்ளது.
7.5% அரசு ஒதுக்கீட்டு பிரிவுக்கு சுமார் 16000க்கும் மேற்பட்ட இடங்கள் இருக்கும். இதில் ஓ.சி – 4960, பி.சி – 4240, பி.சி.எம் – 560, எம்.பி.சி – 3200, எஸ்.சி – 2400, எஸ்.சி.ஏ – 480, எஸ்.டி – 160 இடங்கள் என ஒதுக்கப்படும். இந்த 7.5% ஒதுக்கீட்டு தனியாக தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
Advertisment
Advertisements
பி.சி – 147
பி.சி.எம் – 141
எம்.பி.சி – 157
எஸ்.சி – 135.5
எஸ்.சி.ஏ – 136
எஸ்.டி - 134
இந்த கட் ஆஃப் ரேஞ்சில் உள்ளவர்களுக்கு நிச்சயம் சீட் கிடைக்கும். இதனை விட குறைவாக கட் ஆஃப் உள்ளவர்களுக்கும் சீட் கிடைக்க வாய்ப்புள்ளது.