தமிழகத்தில் இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு விரைவில் தொடங்க உள்ள நிலையில், சாய்ஸ் ஃபில்லிங்கின் போது செய்ய வேண்டியவை என்ன? செய்யக் கூடாதவை எவை? என்பது குறித்து இப்போது பார்ப்போம்.
Advertisment
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வு மூலம் நடைபெறுகிறது. இந்தக் கல்லூரிகளில் பி.இ, பி.டெக் படிப்பில் அரசு ஒதுக்கீட்டுக்கு ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் நடப்பு கல்வி ஆண்டில் சேர்க்கை பெறுவதற்கான ஆன்லைன் விண்ணப்ப்ப பதிவு மே 7 ஆம் தேதி தொடங்கி ஜூன் 6 ஆம் தேதி முடிவடைந்தது. 2.39 லட்சம் அதிகமான பொறியியல் படிக்க விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளும் முடிவடைந்துள்ளது. இதனையடுத்து தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, கலந்தாய்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், சாய்ஸ் ஃபில்லிங்கின் போது செய்ய வேண்டியவை என்ன? செய்யக் கூடாதவை எவை? என்பதை கல்வி ஆலோசகர் தினேஷ் பிரபு தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ள வீடியோவில் விளக்கியுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் ஆண்டுதோறும் பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கினாலும், சிலர் சாய்ஸ் ஃபில்லிங்கில் தவறு செய்து விரும்பிய வாழ்க்கையை தொலைக்கும் நிலையில் இருக்கின்றனர். எனவே சாய்ஸ் ஃபில்லிங்கின்போது கவனமாக செயல்பட வேண்டும்.
Advertisment
Advertisements
சாய்ஸ் ஃபில்லிங்கின் போது செய்யக் கூடாதவை
மொபைல் போனில் சாய்ஸ் ஃபில்லிங் செய்யாதீர்கள்.
முதல் நாளிலே செய்ய வேண்டும் என அவசரப்பட வேண்டாம். ரேங்க் அடிப்படையிலே சீட் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். எனவே நிதானமாக செயல்படுங்கள்.
உங்கள் இ-மெயில் ஐ.டி மற்றும் பாஸ்வேர்டை யாரிடம் கொடுக்காதீர்கள்.
முதல் நாளிலே சாய்ஸ் லாக்கிங் செய்ய வேண்டாம். கல்லூரிகளை தேர்வு செய்த பின் லாக் செய்யாவிட்டாலும் தானாகவே சமர்பிக்கப்பட்டு விடும்.
சாய்ஸ் ஃபில்லிங்கில் மூன்றாம் நபரை நம்ப வேண்டாம்.
கடைசி நிமிடம் வரை காத்திருக்காமல், நிதானமாக நிரப்புங்கள்.
உங்கள் ரேங்க்-க்கு ஏற்ற கல்லூரிகளை தேர்வு செய்யுங்கள். கிடைக்காது என்று தெரியும் டாப் கல்லூரிகளை தேர்வு செய்து குழம்பிக் கொள்ள வேண்டும்.
கல்லூரிகள் மற்றும் கோர்ஸ்களின் வரிசையை சரியாக தேர்வு செய்துக் கொள்ளுங்கள்.
சாய்ஸ் ஃபில்லிங்கின் போது செய்ய வேண்டியவை என்ன?
உங்கள் ரேங்க்-க்கு ஏற்ப அதிக கல்லூரிகளை தேர்வு செய்யுங்கள்.
லூப்பிங் மெத்தடு அடிப்படையில் சாய்ஸ் ஃபில்லிங் செய்யுங்கள்.
முந்தைய ஆண்டு ரேங்க் அடிப்படையில் சாய்ஸ் ஃபில்லிங் செய்ய வேண்டும். கட் ஆஃப் அடிப்படையில் செய்யக் கூடாது.
காலியிடங்கள் அடிப்படையில் சரியான சாய்ஸ் லிஸ்ட் தயார் செய்து, அதன் பின்னர் நிரப்புங்கள். சாய்ஸ்களை தேர்வு செய்த பின் சமர்ப்பியுங்கள்.
பின்னர் டவுன்லோடு செய்து சாய்ஸ்களை சரிபாருங்கள்.
கல்லூரிகளின் கவுன்சலிங் கோடு உள்ளிட்ட தகவல்களை சரிபாருங்கள்.